விசுவாசமே நமது ஜெயம் Jeffersonville, Indiana, USA 58-1004 1இன்று இரவிலே கர்த்தருடைய ஆராதனையில் இருப்பதே ஒரு சிலாக்கியமாய் இருக்கிறது. ஆனால் மக்கள் நம் அழைப்பை ஏற்று வந்தவர்கள் உள்ளே வருவதற்கும், உட்கார இடம் இல்லாமல் இருப்பதும் நிச்சயமாகவே ஒரு வருத்தமான காரியம். நான் இங்கே மேலே வந்தபோது மக்கள் ஜன்னல்களைச் சுற்றியும், தெருவிலே, மேலும் கீழுமாக கட்டிடத்திற்குள் நுழைவதற்கும் இடமின்றி இருந்தார்கள். இது ஒரு மிகவும் சிறிய சபை. மற்றும் நாங்கள் ஒருபோதும் விளம்பரம் செய்வது இல்லை. இங்கு இருக்கும் நாளிதழ்களில் கூட விளம்பரம் செய்வதில்லை. நம்முடைய நண்பர்களில் சிலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெபித்துக் கொள்ளும்படியாக வரலாமா என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் வாருங்கள் என்றோம். அப்படியாக இந்தச் செய்தி படிப்படியாக சுற்றிலும் பரவத் தொடங்கியது. யாரோ ஒருவர் லூயிவில்லிலே இருந்து வந்தவர் யாரோ ஒருவருக்குச் சொல்ல, பிறகு அவர் வேறொருவருக்குச் சொல்ல, இப்படியாகத் தான் அது சுற்றிலும் பரவுகிறது. நான் இங்குள்ள மேல்நிலைப் பள்ளியில் கூட்டத்தைநடத்த விரும்பினேன். ஆனால் அவர்களுக்கு பள்ளி நடந்ததினால் அதைப் பெற முடியவில்லை. அப்படி இருந்திருந்தால் ஒருவேளை நாங்கள் விளம்பரம் செய்திருப்போம். இங்கு சுற்றுப்புறத்தில் உள்ள மக்களுக்கு இதைத் தெரிவிக்க விரும்புகிறோம். அதாவது உங்களை வர தடை செய்வது எங்கள் எண்ணமல்ல. ஆனால் இந்த அறை போதாது என்று நாங்கள் அறிவோம். ஒரு வேளை அந்த மேல்நிலைப்பள்ளி கிடைத்திருந்தால் நாங்கள் விளம்பரம் செய்திருப்போம். ஆனால் அது எங்களுக்குக் கிடைக்கவில்லை. 2புத்தகங்களையும், ஒலிநாடாக்களையும் பெற்றுக் கொள்ள இன்றே கடைசி இரவாக இருக்கிறது. திரு. மெர்சியரும், அவரது குழுவினரும் அவைகளை வைத்துள்ளனர். நாளை காலையிலே ஞாயிறு பள்ளி உள்ளது. ஞாயிறு பள்ளி முடிந்த பிறகு உடனடியாக, கர்த்தருக்குச் சித்தமானால், நான் ஒரு சுவிசேஷ பிரசங்கத்தைச் செய்ய விரும்புகிறேன். அது சரியாக 9.30 மணிக்குத் தொடங்கும். அப்படித்தான் என்று நினைக்கிறேன். சரியா சகோ. நெவில்? சரியாக 9.30 மணிக்கு வேதாகமப் பள்ளி தொடங்கும். ஞாயிறு பள்ளி முடிந்தவுடன், பாவிகளுக்கு அழைப்பு கொடுக்கும்படி ஒரு சுவிசேஷ பொருளுடைய செய்தியைப் பேச விரும்புகிறேன். மற்றும் முடிந்த அளவு கடந்த ஞாயிறு இரவு தொடங்கி எல்லா இரவுகளையும், வியாதியஸ்தர்களுக்காகவும், தேவையுற்றோருக்காகவும் மற்றும் தொல்லையுற்றோருக்காகவும் ஒதுக்கினோம். செய்தி முடிந்த பின், இங்கு வந்து ஜெப அட்டையைப் பெற்றுக் கொண்ட எல்லோரையும் முடிந்த மட்டும் சந்திக்க வாஞ்சிக்கிறேன். அப்படியாக சிலரைத் தவிர்த்து மற்றவர்களை சந்தித்து ஜெப வரிசையை நடத்த வேண்டுமானாலும் நாங்கள் அதை மகிழ்ச்சியோடு செய்வோம். நாளைய இரவு கூட்டத்திற்கான ஜெப அட்டைகள் நாளை காலை ஞாயிறுபள்ளி முடிந்தவுடன் விநியோகிக்கப்படும். சரியாக ஞாயிறுபள்ளி முடிந்தவுடன் 11.30மணி அளவில், ஜெப அட்டைகள் நாளை கொடுக்கப்படும். ஆகையால் ஜெபத்திற்காக வருகின்ற உங்களுடைய அன்பானவர்களும் மற்றுள்ளோரும் செய்திக்கு வர முடியவில்லையென்றாலும் குறைந்தபட்சம் 11.30 மணி அளவில் இங்கு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது உங்களுக்கு ஏற்கனவே ஆராதிக்கும் ஸ்தலம் இருந்து அங்கே போய் பங்கு கொண்டிருப்பீர்களானால் அவ்விடத்திலிருந்து ஒருபோதும் உங்களைப் பிரித்திடமாட்டோம். நீங்கள் செய்யப் போகிற காரியத்தை மிக சுதந்திரமாகச் செய்ய வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். 3நான் இன்று மிகவும் அலுவலாய் இருந்தேன். சற்று நேரத்திற்கு முன்பாக அவர்கள் என்னிடத்தில் வந்து, “நல்லது, இப்பொழுது நீங்கள் கீழே சென்றால் உடனடியாக உங்களுடைய பிரசங்கத்தை தொடங்கலாம்” என்று கூறினார்கள். ஏற்கனவே இந்தச் சிறிய கூடாரம் முழுமையாக நிரம்பிற்று. ஆகையால் நான் இன்றிரவிலே ஒரு சில வசனங்களை வாசித்து அதை உங்களுக்குப் பிரசங்கிக்கலாம் என்று நினைத்தேன். கர்த்தர் நமக்காக செய்த எல்லா காரியங்களுக்காக முதலாவதாக அவருக்கு நன்றி செலுத்த விரும்புகிறோம். நம்மிடத்தில் ஜெபித்துக் கொண்டவர்கள் மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடத்தில் இருந்து பெறப்பட்டுள்ள அறிக்கைகளைப் பார்க்கும்பொழுது, இந்தச் சிறிய இடத்திலே மகத்தான காரியங்கள் நடைபெற்றிருக்கின்றன. இங்கே மேலே பீடத்தண்டை வந்து தனிப்பட்ட முறையில் ஜெபித்துக் கொண்டவர்களைக் காட்டிலும் அநேகர் கூட்டத்தின் மத்தியில் நன்றாக சுகத்தைப் பெற்றுக் கொண்டார்கள் எனத் தெரிகிறது. அதற்காக நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறோம். அந்த விதத்தில் அவர்கள் சுகத்தைப் பெறுவது மிக நல்லது. 4இன்று இரவிலே “விசுவாசமே நம்முடைய ஜெயம்” என்ற ஒரு பகுதியை தெரிந்துகொண்டேன். நான் தெரிந்துகொண்ட வேத பாகமாகிய 1யோவான் 5-ம் அதிகாரம் 4-ம் வசனத்தை வாசிக்க விரும்புகிறேன். @@தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இப்பொழுது என்ன ஒரு அற்புதமான வார்த்தைகள், “நம்முடைய விசுவாசமே ஜெயம்”. இப்பொழுது ஜெயங்களை கொண்டிருக்கிறதை குறித்துப் பேசும்பொழுது, இந்த பூமியின் நீண்டசரித்திரத்திலே மனிதன் தோன்றினது முதல் அநேக மகத்தான ஜெயங்களை வென்றுள்ளார்கள். இரண்டாம் உலகப்போர் (அல்லது) கடைசியான உலகப்போரில் பாரீஸ் நகரம் சரணடைந்ததை குறித்ததான காரியத்தை ஒரு புத்தகத்தில் நான் படித்துக் கொண்டிருந்தேன். அதில் பாரிசிலுள்ள “வெற்றியின் வளைவு” (Arch of triumph) என்ற இடத்திற்கு ஹிட்லர் அழைத்துவரப்பட்டான். அந்த வெற்றி எவ்வளவு மகத்தானது என்றால், அதே “வெற்றியின்வளைவு” வழியாக பல மணி நேரம் ஜெர்மானிய படை வீரர்கள் முட்டி மடங்கா வண்ணம் நடக்கும் முறையில் (goose step) நடந்தனர். அதை ஹிட்லர் நிமிர்ந்து (attention) நேராக நின்று கவனித்துக் கொண்டிருந்தான், அப்போது முழு வானமும் இருளாக இருந்தது. விமானங்கள் விண்ணில் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஜெர்மனி பிரான்ஸ் நாட்டை வெற்றி பெற்றதற்காக அப்பேற்பட்ட ஒரு வெற்றி கொண்டாடப்பட்டது. பிரான்ஸ் ஜெர்மனியிடம் சரணடைந்திருந்தது. 5அதன் பிறகு இங்கிலாந்திலுள்ள லண்டனில் நடந்த கருத்தரங்கில் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு எனக்கு ஒரு சிறப்பு வாய்ப்பு கிடைத்தது. அது பெர்லின் நகரமானது ரஷ்யாவிடம் சரணடைந்த போது ரஷ்யர்களால் எடுக்கப்பட்ட படம். என்ன ஒரு திரளான ராணுவ கருவிகள், மகத்தான பீரங்கிகள் எல்லா பக்கமும் சூழக்கூடிய வண்ணம் பொருத்தப்பட்டிருந்தது. அவை பெர்லின் நகருக்குள்ளாக நுழைந்து வந்தபோது பல மைல் தூரம் எந்த ஒரு ஜீவனும் பிழைப்பதைக் காணக் கடினமாய் இருக்கும். அவர்கள் பார்ப்பதற்கு வெட்டுக்கிளிகள் பவுஞ்சு பவுஞ்சாய் வருவது போல் மைல் கணக்காக எல்லாரும் மிக துல்லியமாகச் சுட்டு, பெர்லின் நகரத்தை முற்றிலும் தரைமட்டமாக்கினார்கள். அந்த பீரங்கிகள் மீண்டுமாக வெளியே அழைக்கப்பட்டு காலாட்படை நன்றாக அந்த இடத்தை சோதனையிட்ட பிறகு அவர்கள் திரு. ஸ்டாலின் அவர்களை உள்ளே அழைத்து வந்தார்கள். அவரை விமானத்தின் மூலமாக அழைத்து வந்து தரை இறங்கினபோது, எல்லா ரஷ்ய வீரர்களும் வெற்றியைக் குறிக்கும் வகையில்,வெற்றி வீரர்களாய், வீதியில் நடைபோட்டனர். அது ரஷ்ய வெற்றிச் சின்னம். அங்கே சாம்பலாய் கிடந்த பெர்லின் மேல் பத்தாயிரத்திற்கும் மேலான வீரர்கள் வெற்றி நடைபோட்டுச் சென்ற போது, ஸ்டாலின் எவ்வளவாய் நிமிர்ந்து (attention) நின்று கொண்டிருந்தான். ஜெர்மானியப் பெண்கள் தெருக்களில் கெடுக்கப்பட்டும், குழந்தைகள் கொல்லப்பட்டும், சிலர் எரிக்கப்பட்டிருந்தாலும் அது ரஷ்ய நாட்டிற்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. 6பிறகு எனக்குக் கூறின விதமாக, கடந்து போன சில வருடங்களில், ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்கு முன்பு, கடந்த நாட்களில் இருந்த பெரிய வெற்றி வீரனான நெப்போலியனின் 'வாட்டர் லூ' (water loo) என்ற இடத்தின் முன்பு நிற்கும்படி எனக்கு ஒரு சிலாக்கியம் கிடைத்தது. அப்போது அங்கிருந்த ஒரு சிறு புத்தகத்தை எடுத்து நெப்போலியனுடைய ஜீவியத்தைப் படித்தேன். அவன் பிரென்ச் மக்களை வெறுத்தான். ஒரு தீவில் பிறந்த அவன் பிரான்ஸ் நாட்டுக்கு வந்து பிரான்ஸ் நாட்டோடு சேர்ந்து ஒரு மிகப் பெரிய வெற்றி வீரனானான். துவங்கும் பொழுது அவன் ஒரு கனவானாக இருந்தான். ஆனால் வெற்றி அவனுடைய தலைக்கு ஏறியது. அவன் தன்னுடன் ஒத்துப் போகாத எல்லாவற்றையும் கொன்று போட்டான். அவன் மேல் அதிக பயம் இருந்ததினால் ஸ்திரீகள் தங்களுடைய குழந்தைகளைப் படுக்க வைப்பதற்கு “அந்தப் பழைய பயமுறுத்துகிற பூச்சாண்டி உன்னைக் கொண்டு செல்லுவான்” என்று பிள்ளைகளைப் பயமுறுத்துவதற்குப் பதிலாக “நெப்போலியன் உன்னைப் பிடிக்கப் போகிறான்” என்று கூறினர் என்று சொல்லப்படுகிறது. அப்போது பிரகாசிக்கிற கண்களையுடைய சிறுவர்கள் அந்தப் பெரிய மிருகமான நெப்போலியனை நினைத்துக் கொண்டு பயந்து துப்பட்டியை இழுத்து துரிதமாக மூடிக் கொள்வார்கள். ஆனால் பாருங்கள், அவன் பெற்ற வெற்றியானது, வெகு நாள் நீடிக்கவில்லை. துவக்கத்தில் அவன் மதுவை விலக்குகிறவனாய் ஆரம்பித்து தன்னுடைய 33-ஆம் வயதில் குடிகாரனாய் மரித்துப் போனான். இந்த வகையான வெற்றியானது நீண்ட நாள் நீடிக்காது. ஏனென்றால் அது உருவாக்கப்பட்ட விதம் சரியில்லை. நீங்கள் ஒருபோதும் தீமையான ஒன்றிலிருந்து நன்மையைப் பெற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் ஆட்டத்தைச் செவ்வையான முறையில் அதற்குரிய விதிமுறைகளோடுதான் விளையாடவேண்டும். 7ஒலிம்பிக் விளையாட்டானாலும் சரி அல்லது மற்ற ஓட்டப் பந்தய விளையாட்டுகளானாலும் சரி அந்தப் பந்தயங்களில் நீங்கள் முதலாவதாக வந்திருந்தாலும், அந்த விளையாட்டை அதற்குரிய விதிமுறைகளோடு விளையாடவில்லையெனில், நீங்கள் ஆட்டத்திலிருந்து நீக்கப்படுவீர்கள் என்று அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் ஆட்டத்தை விதிமுறைகளோடு சரியாக விளையாட வேண்டும். இந்த விதமாகத்தான் மனித ஜீவியமும் இருக்கிறது. நீங்கள் ஜீவிய ஆட்டத்தின் விதிமுறைகளை தவறாக விளையாடிவிட்டு ஜெயத்தை எதிர்பார்க்க முடியாது. நீங்கள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ள நோக்கத்தின்படி கர்த்தருடைய வார்த்தையின் பிரகாரமாக விளையாட வேண்டும். 8அனேக மக்கள், விசேஷமாக நாம் ஜீவிக்கிறதான இந்த காலத்தில், எந்த விதமான நோக்கமும் இல்லாததைப் போல் இருக்கின்றனர். மக்கள் மற்றவர்களைப் போல் தாங்களும் இருந்தால் போதும் என நினைக்கின்றனர். இந்த உலகத்தின் அலங்கரிப்புகளோடும் மற்றும் உலகம் கொடுக்கிற கவர்ச்சியோடும் தங்கள் ஜீவியம் ஒன்றினைந்தால் போதும் என கருதுகின்றனர். அது எவ்வாறாக இருக்கிறது என்றால், பள்ளியில் ஒரு சில சிறுமிகள் ஒருவிதமான கவுன் (அல்லது அதை என்னவென்று அழைத்தாலும்) அணியும்பொழுது பள்ளியிலுள்ள மற்ற எல்லா சிறுமிகளும் அதைப் போல் அணிந்து கொள்வதையே லட்சியமாகக் கொண்டிருப்பது போல இருக்கிறதை பள்ளிக்குச் சென்றால் பார்க்கமுடியும். தொலைக்காட்சியில் ஒரு விதமான பாணியில் ஒருஸ்திரீ உடையணிந்து வருவாள் எனில், சில ஸ்திரீகள் அதைக் கண்டு, அந்த விதமாக உடையணிவது மற்றும் அந்த விதமாக நடந்து கொள்வதே தங்களுடைய லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள். ஒரு புதிய வேலையைப் பெறுவதும் அல்லது அதிகமான சம்பளம் பெறுவதும் அல்லது ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்குவதும், அல்லது ஒரு புதிய கார் வாங்குவதுமே அமெரிக்கர்களின் லட்சியத்தின் எல்லையாய் இருக்கிறது. 9நான் உங்களுக்கு இதைக் கூறட்டும். அந்த காரியங்கள் எல்லாம் ஒருவிதத்தில் சரிதான். ஆனால் மனித ஜீவியத்தில் அந்த காரியங்களைக் காட்டிலும் மேலான இலக்கு இருக்கிறது. மற்றும் கிறிஸ்தவர்கள் தங்களுடைய பற்றுகளை உயர்ந்த லட்சியங்களின் மேல் வைக்கவேண்டும். முதல் கட்டமாக நாம் எல்லோரும் அமர்ந்து, நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என்று யோசிப்பது நமக்கு நலமாயிருக்கும் என நம்புகிறேன். தயவாய் நம்மை இங்கே அழைத்து வந்தது யார், அதை எண்ணிப் பார்த்து, நாம் என்ன செய்ய வேண்டும், அவர் என்ன சித்தம் வைத்திருக்கிறார்; நாம் வந்ததின் நோக்கம் என்னவென்று அவரிடம் கேட்க வேண்டும். ஆனால் நாம் அதை விட்டு உலகத்தோடு சேர்ந்து ஓட நினைக்கிறோம். இப்பொழுது, நாம் இந்த உலகத்தை மேற்கொள்ள முடியும் என வேதாகமம் கூறுகிறது. அதை நாம் எப்படிச் செய்யமுடியும்? இந்த உலகத்தின் பாணியைக் கொண்டு அல்ல. ஆனால் “விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” என வேதம் கூறுகிறது. 10ஒரு சமயம் நடந்த இந்தக் காரியமானது எனக்கு நினைவில் வருகிறது. எனக்கு இந்த வார்த்தையைக் கூற விருப்பமில்லை, ஆனால் அவன் வெட்டியாக ஊர் சுற்றித் திரியும் ஒரு நபராக இருந்தான். அவன் என்னுடைய கதவண்டையில் வந்து, “ஐயா, எனக்கு ஒரு சான்விச் (sandwich: இறைச்சி அல்லது கொத்திய பழத்தை இடையே கொண்டிருக்கும் இரு ரொட்டித் துண்டுகள்) தர முடியுமா?” என்று என்னிடம் கேட்டான். அதற்கு நான் “நிச்சயமாக, நீர் உள்ளே வருகிறீரா?” என்றேன். அவருக்கு சான்விச் செய்து கொடுப்பதைக் காட்டிலும் அவர் புசிப்பதற்கு ஏதாவதைக் கொடுக்கலாம் என்று எண்ணினேன். அவரை அமர வைத்து அங்கு இருந்தவைகளை வைத்து என்னால் முடிந்ததை அவருக்குச் செய்து அவரைச் சாப்பிட உட்கார வைத்தேன். அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், அவர் ஒரு வழிப்போக்கன் என கண்டு அவருடன் பேசலாம் என நினைத்தேன். நான் அவரிடம், “நீர் எங்கேயிருந்து வருகிறீர்” என்று கேட்டேன். அவர் அப்படியே தன் தோளை சிறிது குலுக்கிய வண்ணம் “எங்குமில்லை” என்றார். “பின்னர் நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டேன் அவர் சாப்பிடுவதை நிறுத்தி, என்னைப் பார்த்து, “எங்குமில்லை” என்றார். பின்னர் அவர் அப்படியே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, ஒரு பெரிய சான்விச் துண்டைக் கடித்து விழுங்கி, “ஐயா, என்னுடைய தொப்பி எங்கே இளைப்பாறுமோ, அங்கே தான் நானும் இளைப்பாறுவேன்” என்றார் . அதற்கு நான், “ஓஅப்படியா, எவ்வளவு காலமாய் நீர் இப்படி செய்து கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டேன். அதற்கு அவர் “ஓ, அது ஒரு இருபது ஆண்டுகள் அல்லது அதற்கு சற்று அதிகமாக இருக்கும்” என்றார். தன் நிலையை மாற்ற வேண்டும் என்ற எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் இருந்தார். 11இப்பொழுது, இதுவே மக்களின் அணுகுமுறையாய் இருக்கிறது. இதைத் தான் நான் நிலையற்றவன் என்றும், குறிக்கோள் இன்றி அலைந்து திரிபவன் என்றும் அழைக்கிறேன். சபையில் சேருகிற மக்களும் அந்த விதமாகத் தான் இருக்கிறார்கள். நான் அடிக்கடி, 'தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் 'மரக்கட்டை' -யைக் குறித்து நினைத்துப் பார்த்திருக்கிறேன். அந்த நீரில் அடித்துக் கொண்டு வரப்பட்ட மரக்கட்டையானது, எந்த வகையான குப்பையிலும் அங்கே சிக்கிக் கொள்ளும். குறிக்கோள் இன்றி அலைந்து செல்பவர்கள் சபையிலும் மற்ற இடங்களிலும் அந்த விதமாகத்தான் இருக்கிறார்கள். நீ ஜீவ நதியைப் போல ஒரு நீரோடையை எடுத்துக் கொள்வாயானால். அங்கு ஒவ்வொரு குப்பை குவியலிலும் அநேக மரக்கட்டைகள் சிக்கிக் கொண்டு இருக்கும். ஆனால் மரக்கட்டையால் செய்யப்பட்ட ஒரு படகோ அங்கே கடந்து செல்லுகிறது. ஏன் என்று நீங்கள் கவனிப்பீர்களானால் அந்த மரமானது ஒரு வல்லுனரால் வடிவமைக்கப்பட்டு செய்யப் பட்டிருக்கிறது. வடிவமைக்கப்பட்டதுமல்லாமல் அந்த படகானது, ஒரு வல்லுனரால், வழிநடத்தப்பட்டு,ஒரு வல்லமையினால் உந்தித் தள்ளப்படுகிறது. இங்கு நாம் எல்லோரும் அதே வகையிலேயே செய்யப்பட்டிருக்கிறோம். நமது ஓட்டம் நம்முடைய லட்சியத்தைச் சார்ந்தே இருக்கிறது. 12அந்த மகத்தான கலைஞன் உங்களை உபயோகப்படுத்தவும், உங்களை கட்டுப்படுத்தவும், அவருடைய வல்லமையை பயன்படுத்தும்படி நீங்கள் உங்களைச் செதுக்க அர்ப்பணிப்பீர்களா? எஜமானின் கைகளால் செய்யப்பட்ட, அந்த தனித்துவம் வாய்ந்த, அந்த சிறியபடகு பாதையில் மேலோட்டமான தண்ணீரிலுள்ள, கடற் பாசியில் எங்கேயாவது சிக்குமானால், அப்பொழுது அந்த சிறிய படகை அந்த எஜமானால் திருப்பி, மறுபடியும் ஆழமான தண்ணீருக்குள் இழுத்துச் செல்ல அதினுடைய பின்பாகத்தில் ஒரு வல்லமை உண்டு. நாம் எந்த விதமாக இருக்க அவர் விரும்புகிறாரோ, அந்த விதமாக நம்மை வனைய தேவன் விரும்புகிறார். ஆனால், நாம் தேவன் கிரியை செய்வதற்காக சற்று அமைதியாகக் காத்திருக்காவிட்டால், அவரால் எப்படி வனையமுடியும்? நாமே நமக்கு எஜமானனாக இருக்க விரும்புகிறோம். அநேகர் சபையில் சேர்ந்து அவர்களுடைய பெயரை ஒரு பதிவேட்டில் (உறுப்பினர் புத்தகத்தில்) பதிவு செய்கிறார்கள். ஆனால், அந்த சபை என்ன விசுவாசிக்கிறது என்றோ, அல்லது அவர்கள் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கிறார்களா என்றோ, அல்லது அவர்கள் முழுசுவிசேஷத்திற்காக நிற்கிறார்களா, அல்லது அவர்கள் வேதத்தின் ஒரு பாகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதோடு கோட்பாடுகளைச் சேர்த்துக் கொள்கிறார்களா என்றோ, ஒருபோதும் பரிசீலனை செய்யாமல் மிதந்து கொண்டு, அலைகழிக்கப்பட்டு, ஒன்றுக்கும் உபயோகமில்லாதவர்களாகிப் போகிறார்கள். 13இன்றிரவிலே, இந்தக் கட்டிடத்தில் உள்ளே இருப்பவர்களுக்கும் மற்றும் வெளியே இருப்பவர்களுக்கும் நான் ஒன்று சொல்லட்டும், “இந்நாள் ஒன்றில் நீங்கள் எல்லோரும் ஓர் இடத்திற்கு வந்தடையப் போகிறீர்கள். அது மரண இருளின் பள்ளத்தாக்காக இருக்கிறது”, அந்த மணி வேளையிலே உங்களைச் சந்திக்க இருக்கும் தேவனைக் காண ஆயத்தமாகுங்கள், என இம்மணி வேளையிலே உங்களுக்கு ஆலோசனை கொடுக்கிறேன். அப்பொழுது நீங்களோ அவரால் செய்யப்பட்ட ஒரு சிறந்த வேலைப்பாடாக அவரைச் சந்திப்பீர்கள், அல்லது உன்னுடைய இறுதியான சேருமிடத்தை நோக்கி அடித்துச் செல்லப்படுகிற மரக்கட்டையாகச் சென்று கொண்டிருப்பீர்கள். ஆகையால், இந்த ஜீவியத்தில் நிலையில்லாமல் வெறுமனே அலைந்து கொண்டு, லட்சியமில்லாமல் சுற்றிக் கொண்டு; ஒரு நல்ல வேலைக்காகவும், மற்றும் நன்றாக உடுத்துவதற்கும், ஒரு புதியதொலைக்காட்சி பெட்டி, அல்லது ஒரு வசதியான கார் வாங்குவதற்கும் பயன்படுத்த வேண்டாம். ஜீவியம் என்பது இதைக் காட்டிலும் மேலானது. “மற்ற எல்லோரும் சபையில் சேரும் பொழுது, நானும் கூடசேருவேன்” என்று ஒரு போதும் சொல்ல முயற்சிக்க வேண்டாம். 14நீங்கள் ஒரு சபையில் சேரும் பொழுது, முதலாவது அந்த சபை எதற்காக நிற்கிறது, என்பதைக் கண்டு அறிய வேண்டும். அந்த சபை வெறும் மக்கள் ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொள்ளும்படி கூடுகிற ஒரு ஸ்தலமாக இருக்கிறதா, அல்லது ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கித்து; இயேசு மரித்த; ஒவ்வொரு கொள்கைக்காகவும் நிற்கிறதா என கண்டறிய வேண்டும். நீங்கள் அதைச் செய்தே ஆக வேண்டும். வெறுமனே மிதந்து கொண்டு, அலைகளோடு அடித்துச் செல்லப்பட வேண்டாம். ஏனெனில், “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். அழிவிற்குப் போகிற வாசல் விரிவும் வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்”. நமக்கு எதைக் குறித்தாவது ஒரு நோக்கம் இருக்க வேண்டும். கடந்த நாட்களிலும், அல்லது இந்த நாட்களிலும் கூட ஒரு மனிதன் தேவனிடத்தில் வரும்பொழுது ஒரு நோக்கத்தை உடையவனாய் இருந்தான். ஆனால் இப்பொழுது அப்படி இருக்கிறதில்லை. உன்னுடைய நோக்கமானது ஒரு சபையாரோடு சேர்ந்து அவர்கள் போகிற போக்கில் போவதா? அல்லது, தேவனை நோக்கிப் பார்ப்பதா?. 15தானியேல், தன் சொந்த தேசத்திலிருந்து வேறொரு தேசத்து மக்களின் கீழ் அடிமையாக இருக்கும்படி, பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்ட பொழுது; அவன் தன் இருதயத்தில் ஒரு நோக்கமுடையவனாய்; அவர்கள் அவனுக்கு என்ன செய்தாலும், தன்னை பாபிலோனின் பாவத்தினால் கெடுத்துக்கொள்ளப் போவதில்லை என தீர்மானித்தான். ஓ, “நான் ஒரு கிறிஸ்தவனானால், தேவன் எனக்கு வைத்திருக்கிற, எல்லா தெய்வீக ஆசீர்வாதங்களையும் கண்டுபிடித்து உரிமை கோரப் போகிறேன். வேதாகமம்; பரிசுத்த ஆவியைப் பெற முடியும் என்று போதிக்கும் பட்சத்தில், நான் அதை முழங்காலில் நின்று, தேவன், அதை எனக்குத் தரும் மட்டும் கடந்து போக மாட்டேன்” என்று, தங்கள் இருதயத்தில் தீர்மானிக்கும் இவரைப் போன்ற துணிவுள்ள மனிதர்களை, இன்னும் அதிகமாக நாம் கொண்டிருப்போமானால்.... 16சில நாட்களுக்கு முன்பு நான் அந்தப் பழைய அங்கிள் பட்டி ராபின்ஸன் (Buddy Robinson), அவர்களின் ஜீவிய சரித்திரத்தை வாசித்தேன். அவர் ஒரு மகா பெரிய மனிதர், அன்பும், விசுவாசமும் கொண்ட மனிதர். வேதாகமம், பரிசுத்த ஆவியைக் குறித்து போதித்தபடியால் அதைக் குறித்து பசிதாகம் கொண்டிருந்தார். அந்த ஜீவிய சரிதத்தில் இப்படியாகக் கூறப்படுகிறது. ஒரு நாள் அவர் வயல்வெளியில், சோள வயலை உழுது கொண்டிருந்தார். அப்போது அவர் தன்னுடைய வயதான கோவேறு கழுதையாகிய எல்லியை நிறுத்திவிட்டு, தன்னுடைய அந்த சோள வரிசையில் முழங்கால் படியிட்டு, “தேவனே, நீர் எனக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை தரவில்லை என்றால், நீர் பூமியிலே மீண்டும் வரும் போது என்னுடைய எலும்புகளை இங்கேயே காண்பீர்” என்று ஜெபித்தார். அது தான் இருதயத்தில் நோக்கம் கொள்வது. உண்மையாக காரியத்தில் இறங்குவது என்பது அதுதான். அப்படிப்பட்ட எண்ணத்தை, உங்கள் இருதயத்தில் நீங்கள் கொள்ளும் பொழுது, தேவன் வானத்தின் பலகணிகளை உங்களுக்காகத் திறந்து கொடுப்பார். அங்கு ஏதோ ஒன்று நடந்தே ஆகவேண்டும். நீங்கள் நிச்சயமாகவே, தேவனோடு கூட, ஒரு நோக்கத்தோடு தீர்க்கமாய் அண்டிச் சேர வேண்டும். உன்னை இரட்சித்ததற்காக நன்றியுடைய இருதயத்தோடு இருக்க வேண்டும். 17தானியேல் தன்னுடைய இருதயத்தில் எடுத்த தீர்மானத்தை சாத்தான் நிரூபிக்க வைத்தான், ஆனால் பசியாக இருந்த சிங்கத்தின் முன்பாக நிற்க, அது போதுமானதாக இருந்தது என காண்கிறோம். ஒரு மனிதன் தன்னுடைய இருதயத்தின் ஆழத்தில், எப்பொழுதும் நிலையான விசுவாசத்தோடு, தேவனிடத்தில் வருவானானால் அப்போது மரணமானாலும், வியாதியானாலும், மற்றும் துன்பத்தின் வாயானாலும், இவைகளை மேற்கொள்ள அது போதுமானது. ஏனென்றால், விசுவாசமே ஜெயமாயிருக்கிறது. நீங்கள் உங்களுடைய விசுவாசத்தினால் மேற்கொள்கிறீர்கள். ஆபிரகாம் ஜீவியத்திலே, எந்த வித நிச்சயமான நோக்கமில்லாத, ஒரு சாதாரன மனிதனாக இருந்தான். தன்னுடைய தந்தையோடும், நண்பர்களோடும், பாபிலோனிலிருந்து புறப்பட்டு வந்து, சிநெயார் என்னும் இடத்தில் குடியேறினான். அங்கே தான் அவர்கள் கோபுரத்தையும் மற்ற காரியங்களையும் கட்டியிருந்தார்கள். ஒருநாள், ஆபிரகாம் ஜெபித்துக் கொண்டு இருந்தான். அன்று அவன் தொடர்ந்து ஜெபித்து, தேவனுடைய கரத்தைத் தொடும் வரைக்கும் ஜெபித்துக் கொண்டிருந்ததில், எந்த சந்தேகமும் இல்லை. அவன் அதை எப்படிச் செய்தான்? விசுவாசத்தினால். ஒரு வேளை அவன் இது போல் நினைத்து இருக்கலாம், “ஒரு பேழையை உண்டாக்கி, நோவாவை அதில் மிதக்கச் செய்த ஒருவர் உண்டு என்றால், அவர் இன்னமும் ஜீவிக்கவேண்டும்”. அவன் தேவனை அறியாதவர்களின் தேசத்தில் தற்காலிகமாக வசிக்கும் சமயத்தில், தேவனுடைய கரத்தைத் தொட்டான். அங்கேதானே, தேவன் அவனுக்கு “ஒரு பட்டணம் உண்டு, அந்த பட்டணத்தைக் கட்டினவரும், உருவாக்கியவரும் தேவனே” என்ற வெளிப்பாட்டைத் தந்தார். 18ஆபிரகாம் ஜீவியம் முழுவதும், இந்த உலகத்தில் அந்நியனாகவும், ஒரு யாத்திரிகனாகவும் இருந்தான் என வாசிக்கிறோம். ஏனென்றால், அவன் தேவன் தாமே கட்டி உண்டாக்கின நகரத்தை கண்டுபிடிப்பதையே நோக்கமாக வைத்திருந்தான். அவன் ஏதோ ஒன்றைத் தொட்டான். அவன் தேவனையும், அவருக்குள்ளான விசுவாசத்தையும் பிடித்துக் கொண்டு, வரப்போகிற புதிய எருசலேமை முன்னரே கண்டான். தன்னுடைய மூட்டையை தூக்கிக் கொண்டு, அலைந்து திரிகிறவனானான். எந்த விதமான நோக்கமும் இல்லாமல், மிதந்து கொண்டு போகிற கட்டையைப் போல் அல்ல; தேவன் தாமே கட்டி உண்டாக்கின நகரம் உண்டு என்ற விசுவாசத்தோடு, அந்த நித்திய நகரத்தைக் கண்டுபிடிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தான். அந்த இடத்தைக் கண்டுபிடிப்பதையே ஜீவிய நோக்கமாகக் கொண்டிருந்தான். நான் இதை இங்கே சொல்லட்டும், ஒரு நாளிலே யுத்தமானது முடிவடைந்தபோது, அவன் அந்த நகரத்தின் ராஜாவை சந்தித்தான். அந்த ராஜா அவனுக்கு அப்பத்தையும், திராட்சை ரசமதுவையும் கொண்டு, இராபோஜனம் கொடுத்தான். அவரே அந்த மெல்கிசேதேக்கு. தேவனுடைய வாக்குத்தத்தத்தின் நிஜத்தன்மையை அறியாதபட்சத்தில், உங்களுடைய இருதயத்தில் எந்த ஒரு நோக்கமும் கொண்டிருக்க முடியாது. உன்னுடைய ஆத்துமாவானது பாவத்தினாலும், சந்தேகத்தினாலும், ஏற்றத்தாழ்வுகளினாலும், குழப்பத்தினாலும், வேதனைக்குள்ளாக்கப்பட்டிருக்கும்போது; உங்களுக்குள் ஏதோ ஒன்று “ஆம் எப்படியாவது, அதை ஜெயங்கொள்ளமுடியும்” எனக் கூறினால், எதற்காக நீ, சபை சபையாகவும், ஒவ்வொரு இடமாகவும், அலைந்து கொண்டிருக்கிறாய்? நீ பரலோகத்தை சந்திக்கும் வரை, முழங்காலில் நில் மற்றும் நேற்று இரவு நான் சொன்ன விதமாக “ஒலித் தடைகளைத் (Sound Barriers) தாண்டிச் செல்”, அப்பொழுது உன்னுடைய ஜீவியத்தில் ஒரு நோக்கத்தைப் பெறுவாய். அப்போது சபையில் சேருவதற்கு ஒரு நோக்கம் இருக்கும். அப்போது உனக்கு ஞானஸ்நானம் எடுப்பதில் ஒரு நோக்கம் இருக்கும். நீ எதைத் தேடுகிறாயோ அதில் ஒரு நோக்கமுடையவனாக இருப்பாய். 19ஏனெனில், தேவன்உண்மையுள்ளவர் என்றும், அவர் சத்தியபரர் என்றும், அவர் பொய்யுரைக்க முடியாதவர் என்றும், நாம் அறிந்திருக்கிறோம். தேவன் அவருடைய சத்ததின் மூலம், அதாவது அவருடைய வார்த்தையின் மூலம், ஆபிரகாமினுடைய இருதயத்தில் இதை வைத்திருப்பாரானால்; அவர் அவருடைய வேதாகமத்தில், இயேசுகிறிஸ்து இன்னும் ஜீவிக்கிறார், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவார்“ என்று, நமக்காக நமக்கு முன்பாகவே வைத்திருக்கிறார். இதை அவர், பரிசுத்த ஆவியானவராக, திரும்பவும் வந்து, அற்புத அடையாளங்களினால், பரிசுத்த ஆவியானவர் மூலம் உறுதிப்படுத்திருக்க, நாம் ஏன் இன்னும் நாம் வாஞ்சிகிற காரியங்களையே தேட வேண்டும்? உங்களுக்கு ஏதாவது தேவையிருக்குமானால், அது எந்த விதமான தேவையாயிருந்தாலும், தேவன் எதையெல்லாம் அவருடைய வேதத்தில் வாக்களித்திருக்கிறாரோ, அதையெல்லாம் அவர் இன்றிரவிலே சந்திக்கும்படி இங்கு இருக்கிறார்; இனியும் அவரைத் தேட வேண்டிய அவசியம் இல்லை.அவருடைய சமூகம் இங்கேயே இருக்கிறது. அவருடைய ஆவியும் இங்கே இருக்கிறது. நீ எதை வாஞ்சித்துத் தேடுகிறாயோ, அதை அவர் உனக்கு கொடுப்பதற்கு அவர் விருப்பமுள்ளவராகவும், தயாராகவும், ஆசையாகவும் இருக்கிறார். நீ ஏன் இனியும் காத்திருக்க வேண்டும்? 20நீ அவரிடத்தில் வரும்பொழுது, அடித்து செல்லுகிறவனைப் போல் வர வேண்டாம். நான் சென்று அவை கிரியை செய்கிறதா என்று முயற்சி செய்துபார்ப்பேன் என்று வர வேண்டாம். நீ எங்கு சென்றாலும் எதையும் பெறமுடியாது. நீங்கள் இந்த உலகத்தின் பாவத்திலிருந்தும், அவிசுவாசத்திலிருந்தும், சந்தேகங்களிலிருந்தும், விரக்தியிலிருந்தும், முற்றிலுமாக ஒரு தீர்மானத்தோடு, காலங்களின் கன்மலையில் இறுக நங்கூரமிடப்பட்டு, ஜீவனுள்ள தேவனிடத்தில் வரும்பொழுது, இங்கே இருக்கிற ஆவியானவர் தாமே தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளாக இழுத்துக் கொள்வார். அவர் தாமே உனக்கு இந்த உலகத்தில் இருக்கும் எந்த விதமான வியாதியையும், நோய்களையும், மரணத்தையும் கூட ஜெயம் கொள்கிற விசுவாசத்தை அளிப்பார். சகோ. பிரான்ஹாம் அவர்களே என்ன கூறுகிறீர்கள்? “மரணத்தையுமா?, ஆம். அதைத் தான் நான் அர்த்தமிடுகிறேன். மரணத்தையும்”. 21மரித்து பூமியிற்கடியில் லாசரு கிடந்தான் அல்லவா? அவன் சரீரம் மக்கிப் போக துவங்கியிருந்தது. இயேசு மார்த்தாளை நோக்கி, லாசருவை எங்கே அடக்கம் செய்தீர்கள்? என்று கேட்டார். பின்பு அவளை நோக்கி, நீ சந்தேகப்படாமல் இருந்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்றார். சந்தேகப்பட வேண்டாம் என்று, நான் உனக்குக் கூறவில்லையா? அன்று இரவு அல்லது பகலிலே யவீருவினிடத்தில், நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்றார். பிறகு விசுவாசமானது மரணத்தை ஜெயம் கொள்கிறது. விசவாசமானது மரணத்தின் மீதான வெற்றியாய் இருக்கிறது. விசுவாசமானது பாவத்தின் மீதான வெற்றியாய் இருக்கிறது. விசுவாசமானது வியாதியின் மீதான வெற்றியாய் இருக்கிறது. விசுவாசமானது கவலைகளின் மீதான வெற்றியாய் இருக்கிறது. விசுவாசமானது பதற்றத்தின், குழப்பங்களின் மீதான ஜெயமாய் இருக்கிறது. விசுவாசமானது உலகத்தின் மீதான ஜெயமாய் இருக்கிறது. 22யோவான் இந்த வசனத்தை எழுதும்போது, அவருக்கு எந்த பிரச்சனைகளும் இருந்ததில்லை என்று நீங்கள் சொல்லலாம். நான் சந்திக்கும் மக்களைப் போல் அவர் சந்திக்கவில்லை என்று சொல்லலாம். நான் கடந்து செல்லும் காரியங்களினூடாக அவர் கடந்து செல்ல வேண்டியதில்லையே என்று சொல்லலாம். அது சரி தான். அவர் நீ சந்திக்கும் மக்கள் போன்றவர்களை சந்திக்காமல் இருந்திருக்கலாம். நீ மேற்கொள்ளும் காரியங்கள் போன்றவற்றை மேற்கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் அவைகளைப் புறக்கணிக்கவில்லை. ஏனென்றால் “இந்த விசுவாசமே உலகத்தையும் மற்றும் எல்லாவற்றையும் ஜெயிக்கிற ஜெயம்” என்று சொன்னார். அது எப்படி சாத்தியம்? அதிலே விசுவாசம் இருக்கிறது. அதில் முழுவதும், அதற்கு மேலும் கடந்து செல்லுங்கள். நமக்கு முன்பாக எழுதப்பட்ட வார்த்தையானது வைக்கப்பட்டிருக்கிறது. மற்றும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை, பரிசுத்த ஆவியானவர் செயலாக்கத்திலே காண்பித்து, “விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே, எவைகளைக் கேட்பீர்களோ, நீங்கள் அவைகளைப் பெற்றுக் கொள்வீர்கள் என்று விசுவாசிக்கும் போது, அவைகளைப் பெற்றுக் கொள்வீர்கள்” என தெய்வீக வாக்குத்தத்தம் எழுதியிருக்கும் போது, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? விசுவாசம் உடையவர்களாய் இருங்கள். நிலையற்றதான விசுவாசமோ அல்லது பாவனை விசுவாசமோ அல்ல. உண்மையான விசுவாசத்தையே கொண்டிருங்கள். 23இப்பொழுது விசுவாசமானது ஒரு ஜெயவீரன். விசுவாசமானது ஒரு மேற் கொள்ளுகிறவர். அது சமரசம் செய்து சமாதானத்தை உண்டுபண்ணுகிறவர் அல்ல, அது அவைகளை ஜெயம் கொள்ளும். விசுவாசமானது உலகத்தை ஜெயிக்கிற ஜெயமாயிருக்கிறது. அது என்ன செய்கிறது? விசுவாசம் என்றால் என்ன? மேற்கொள்ளுதல் என்றால் என்ன?. ஜெயம் கொள்ளுதலும், வெற்றியும் ஒன்று தான். மேற்கொள்ளுதல் என்பது ஒருவனை அடித்து நையப்புடைத்து, மேற்கொண்டு, விலங்கிட்டு, சிறையிலிடுவது. அதற்கு என்ன அர்த்தமென்றால், முன்பு ஒரு காலத்தில் உன்னை ஆண்ட பாவத்தை இப்பொழுது நீ ஆளுகை செய்கிறாய். நீ அதை மேற்கொண்டு கட்டிவிட்டாய் என்று அர்த்தம். ஓ, நீ அதைக் காட்டிலும் பெரியவனாகிவிட்டாய். ஓ‚ நான் இப்பொழுது அதிகம் பக்திபரவசமடைகிறேன். யார் முதலில் இருந்தது? பாவியா அல்லது இரட்சகரா? ஒரு இரட்சகர் முதலில் இருந்தார். அவர் பாவத்தைக் காட்டிலும் மிக வல்லமையுள்ளவராக இருக்கிறார். முதலில் எது இருந்தது. சுகமளிப்பவரா? வியாதியா? வியாதியை அவர் மேற்கொள்ள முடியவில்லையெனில், அவர் சுகமளிப்பவராக இருக்க முடியாது. ஆகவே, வியாதியை மேற்கொள்ளும் சுகமளிப்பவரே முதலில் இருந்தார். மற்றும் விசுவாசமானது பிசாசினுடைய எல்லா சாபத்தையும் மேற்கொள்ளுகிற ஜெயமாயிருக்கிறது. விசுவாசமே ஜெயம். 24எதின் மேல் விசுவாசம்? உன்னுடைய சபையின் மேல் உள்ள விசுவாசம் அல்ல; உன் கோட்பாடுகளின் மேல் உள்ள விசுவாசம் அல்ல; அல்லது ஏதோ ஒரு மனிதன் மேல் வைக்கும் விசுவாசம் அல்ல; ஆனால், வாக்குத்தத்தம் செய்த இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசமே வெற்றி. அது என்ன? அதுவே, ஜெயம் “என்னுடைய கை இன்னும் முடமாகக் கிடக்கிறது” என்று நீ சொல்கிறாய். ஆனால் விசுவாசமே ஜெயமாயிருக்கிறது. “நான் இன்னும் சுகவீனமாய் உணருகிறேன்” என்று சொல்கிறாய். ஆனால் விசுவாசமே ஜெயமாயிருக்கிறது. ஓ‚ அது உலகத்தை மேற்கொள்கிறது. நீங்கள் ஜெபத்திலே தேவனுக்குள்ளாக ஏறிச்சென்று நீங்கள் மேற்கொண்ட காரியத்தை காணும்பட்சத்தில் எதுவும் உங்களை துன்புறுத்த முடியாது. நீங்கள் மேற்கொண்டுவிட்டீர்கள். நீங்கள் செயல்படுவதற்கு ஐம்பது மைல்கள் கொண்ட அறை உண்டு. அதற்குப் பிறகு நீங்கள் சுதந்திரமாக பிரயாணம் செய்யலாம். விஸ்கி மதுவுக்கு அடிமையாகி குடிகாரனாக இருந்த நீ, இனி அதற்கு நீ எஜமானனாக இருப்பாய். உன்னை குடிக்க வைத்த அந்த பழைய மதுபானத்தின் பிசாசு, இப்பொழுது உனக்கு எஜமானாக இருக்கிறான். ஆனால், நீ விசுவாசத்தைப் பெற்றுக்கொள்ளும்பொழுது, பாவனை விசுவாசத்தைப் பற்றி அல்ல; ஒரு அசலான விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ளும்பொழுது; அவன் உனக்கு வேலைக்காரனாக மாறுகிறான். இதோ புகையிலையை விட முடியாத ஆண்களும், பெண்களும் விசுவாசத்தினால் அதை மேற்கொண்டீர்கள் என்ற நிலைக்கு வரும் மாத்திரத்தில், அப்பொழுது நீங்கள் அதற்கு எஜமானாய் இருப்பீர்கள். 25இப்பொழுது இங்கே அமர்ந்து இருக்கிற இந்த சிறிய ஸ்திரீயானவள்; இந்த பலிபீடத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள். ஒரு அருமையான ஸ்திரீ. ஆனால், அநேக நாட்களுக்கு முன்பாக அவள் புகைபிடிக்க ஆரம்பித்து; அந்த பழக்கத்தை மேற்கொள்ள முடியாமல் இருந்தாள். அவள் வரும் பொழுது நானும் அவர்களோடு கூட அவளுக்காக ஜெபிப்பேன். ஆனால், அவளால் அதை மேற்கொள்ள முடியாதது போல் தெரிந்தது. நான் முதலாவதாக அவளிடத்தில் “இது வழியில் ஆபத்தானது” என்று கூறினேன். அதற்கு அவள், “சகோ. பிரான்ஹாம், நான் அழுதேன், நான் கெஞ்சினேன்” என்றாள். பாருங்கள்‚ வெறும் உணர்ச்சிவசப்படுதல்‚ வெறும் பேச்சு‚ ஆனால், அது ஒரு நன்மையும் தராது. நான் மறுபடியும் அவள் மேல் கைகளை வைத்து அவளுக்காக ஜெபிப்பேன்; அதற்குப் பின், அவளும் திரும்பிச் செல்வாள். சில நாட்கள் கழித்து மீண்டும் அவளை சந்திப்பேன். அப்போது அந்த சிகிரெட் புகை அவளை நிலைகுலைய அடித்துக் கீழே தள்ளும். அவளுடைய கைகள் பழுப்பு நிறமாகக் காணப்படும். ஒரு நாள் இரவிலே அவள் அங்கேயிருக்கிற ஒரு மருத்துவரிடத்திற்குச் சென்றாள். நோய்வாய்ப்படத் தொடங்கி மெலிந்து, நலிந்து, தளர்ந்து போனாள். மருத்துவர் அவளைப் பார்த்து சிகரெட் புகைத்ததினால் உனக்குப் புற்றுநோய் வந்திருக்கிறது என்றார். அங்கே அவள் மரிக்கும் தருவாயில் படுத்துக் கிடந்தாள். அதன் பின் அவள் சிரத்தையோடு காரியத்தில் இறங்கினாள். 26பாருங்கள்‚ மூழ்கும் மனிதன் தான் புல்லைப் பிடிக்கப் போவான். இன்று இரவிலே நீ இந்த சபையை விட்டு வெளியேறி ஒரு மெத்தடிஸ்டு, அல்லது ஒரு பாப்டிஸ்டு சபையில் அமர்ந்து கொண்டு, “நான் ஒரு நல்ல மனிதன், என்னிடத்தில் தவறு ஏதுமில்லை” என்று கூறும்படி உன்னை வைப்பாயானால்; உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. அது சரிதான். ஆனால், தேவன் எப்படி உன்னுடைய பாவத்தை வேதத்தின் வெளிச்சத்தில் பார்க்கிறாரோ‚ அப்படியே நீயும் பார்ப்பாயானால்‚ நீ ஒன்று மனந்திரும்புவாய், அல்லது அழிந்து போவாய். ஏதாவது ஒன்று நடக்கும். அப்பொழுது நீ மிகவும் சிரத்தையோடு காரியத்தில் இறங்குவாய். நீ இங்கேயிருந்து வெளியே போகும் பொழுது, மூச்சடைப்பது போல் நீ உணருவாய். அப்பொழுது அங்கேயிருக்கிற மருத்துவர் உனக்கு மாரடைப்பு என்று சொன்னால், நீ உடனடியாக சிரத்தையோடு காரியத்தில் இறங்குவாய். அந்த விதத்தில் தான் அந்த ஸ்திரீ சிரத்தையோடு காரியத்தில் இறங்கினாள். இப்பொழுது, அந்த ஸ்திரீ இங்கே அமர்ந்து என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். 27சகோ. ராபர்ஸனும், பின்னாக இருக்கிறார், சகோ. உட்ஸ் இங்கு எங்கேயோ ஒரு இடத்தில் அமர்ந்து இருக்கிறார்; மற்றும் நானும் வேட்டைக்காக, (ஒரு டிரக்கில் என நினைக்கிறேன்) சென்றிருந்தோம். அப்பொழுது அந்த ஸ்திரி இருந்ததான நாப்ஸ் என்ற இடத்தை நோக்கி பரிசுத்த ஆவியானவர் எங்களை நடத்தினார். நான் அங்கு சென்றடைந்த போது அவளுக்கு ஒரு சொப்பனம் உண்டாயிருந்தது. அப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் அந்த அறைக்குள்ளாக வந்தபோது, அவள் மிகவும் சிரத்தையோடு காரியத்தில் இறங்கினாள். அந்த நிமிடம் முதற்கொண்டு அவள் ஒருபோதும் சிகரெட்டை புகைக்கவில்லை. அவளுடைய எடை கூட அதிகமானது. மற்றும் புற்றுநோயின் ஒரு அறிகுறியையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது என்ன? விசுவாசமே அதை மேற்கொள்கிறது. நான் இங்கே அவளுக்காக ஜெபிக்கும்பொழுது ஏன் மேற்கொள்ளக் கூடாமற் போனது? அவள் இங்கே வெறுமனே ஒரு நோக்கம் இல்லாமல் திரிந்து கொண்டிருந்தாள். ஆனால், மருத்துவர் “உனக்கு புற்றுநோய் இருக்கிறது. நீ மரிக்கப் போகிறாய்” என்று கூறினபொழுது, அவள் அலுவலில் இறங்கினாள். அந்த விதத்தில் தான் அதைப் பெற்றுக் கொள்ளவேண்டும். நீங்கள் சிரத்தையோடு காரியத்தில் இறங்குவதற்கு ஏன் நீண்ட காலம் காத்திருக்கவேண்டும்? ஏன் இப்பொழுதே தேவனோடு கூட அலுவலில் இறங்கக் கூடாது? தேவன் மேல் உங்களுடைய விசுவாசத்தை வையுங்கள். அந்த ஸ்திரீயானவள் என் மீது விசுவாசம் வைத்திருப்பாளென்றால் என்ன நடந்திருக்கும்? அது தோற்றுப் போயிருக்கும். ஏனெனில் நான் ஒரு மனிதன். ஆனால், அவள் தன்னுடைய விசுவாசத்தை மாற்றி; பிரான்ஹாம் கூடாரத்தின் மீதோ, அல்லது வில்லியம் பிரான்ஹாம் மீதோ, அல்லது வேறு யார் மீதோ வைக்காமல்; இயேசு கிறிஸ்துவின் மேல் தன் விசுவாசத்தை வைத்தாள். அப்பொழுது அவள் விசுவாசத்தைப் பெற்றுக் கொண்டாள். அவள் எல்லா விதமான சந்தேகங்களையும், பயத்தையும் கடந்து மேலாக எழும்பினாள். அப்பொழுது தேவன் அவளை சுகமாக்கினார். ஓ‚ அவள் மேற்கொண்டாள்‚ விசுவாசமே ஜெயமும், அதுவே மேற்கொள்ளுகிறதுமாக இருக்கிறது‚ 28எதற்காக கிறிஸ்தவர்கள் தங்களை சில காரியங்களைக் கொண்டு குழம்பிக் கொள்கிறார்கள் என, நான் பலதடவை வியந்து போயிருக்கிறேன். அநேக ஆண்களும், பெண்களும் தனிப்பட்ட விதத்தில் என்னை சந்தித்து; அனேக முறை தங்களின் ஒழுக்கமற்றது போன்றதான ஜீவியத்தை அறிக்கை செய்வார்கள்;. அவர்களால் அதை மறுதலிக்க முடியாது. ஏனெனில், பரிசுத்த ஆவியானவர் சரியாக அங்கேயே இருக்கிறார். அவர்கள் அதை மறைக்க முயற்சித்தால், அவர்களுக்காக அது வெளியே கொண்டு வந்து விடும். அதனால் அவர்களே அதை அறிக்கை செய்து விடலாம். அவர்கள் விலக முயற்சித்தால் பரிசுத்த ஆவியானவர் “ஒரு நிமிடம்பொறுங்கள். இதோ இங்கே சில குறிப்பிட்ட காரியம் இருக்கிறது”, என்று கூறிவிடுவார். ஆகையால் அவர்கள் வரும்பொழுது; சிறு, சிறு உலக காரியங்களைக் குறித்துப் பேசத் துவங்குவார்கள். இதை நான் விசுவாசிகளிடத்தில் கவனித்தேன். நீ எங்கேயோ சென்றுகொண்டு இருக்கிறாய். எதற்காக நீ நோக்கமில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறாய்? உன்னைக் குறித்து ஒரு இலட்சியத்தைப் பெற்றுக் கொள். கிறிஸ்துவின் மேல் உங்கள் இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். உலகத்தோடு சுற்றித் திரிவதை விட்டுவிடுங்கள். 29நீ ஒரு பத்திரிக்கையை எடுப்பாய், அதில் “இந்த நாட்களில் தெய்வீக சுகமளிப்பவர்களா?” தெய்வீக சுகம் அளிப்பவர்கள் என்று யாரும் கிடையாது என கூறும். அது உன்னுடைய மனதில் ஒரு சந்தேகத்தை வைக்கும். யாரோ ஒருவர் வானொலியில் ஒரு அருமையான பிரசங்கத்தைச் செய்து, அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டது என்று சொல்வார். அதற்கு நீயும் ஆதரவு கொடுப்பாய். பாருங்கள்‚ அது உன்னை பலவீனமாக்கும். எல்லாவற்றையும் விட்டுவிடு; தேவனோடு சரிசெய்து கொள்ளுங்கள். ஒன்று நீ நீயாகவே முழுமையாக இரு; அல்லது அப்படி இருக்கவே இருக்காதே. தேவனுடைய வேதம் அதைக் குறித்து போதிக்கவில்லை என்றால், அதிலிருந்து உன்னை புறம்பாக்கிக்கொள்; அதைக் குறித்து போதிக்குமெனில் அதோடு கூட தரித்திரு. 30எனக்கு இந்தக் காரியத்தை நினைப்பூட்டுகிறது‚ ஒரு எடுத்துக் காட்டுக்காக, முப்பது நாட்கள் பயணமாக ஒரு வேளை நாம் இங்கிருந்து வேறு இடத்திற்குப் போவோம் என்றால் எப்படி இருக்கும்? அந்த இடத்திலே, சீதோஷ்ண நிலையானது அற்புதமாய் இருக்குமென்றால்; நாம் ஒருபோதும் திரும்பி வரவே மாட்டோம். ஆனால் போகிற அந்த இடத்தில் நாம் மூப்பு அடைவதோ, அல்லது மரணமோ இல்லாமல், நித்திய நித்தியமாய் அங்கே இருப்போமெனில்; நீங்கள் அந்த இடத்திற்கு கொண்டு செல்வதற்கு, மலிவு விலை கடைக்குச் சென்று, மூட்டை மூட்டையாக குப்பையை வாங்கி கட்டிக்கொண்டிருப்பதை என்னால் கற்பனை செய்யக்கூடுமோ? நீங்கள் உங்களிடம் உள்ள தேவையில்லாத குப்பைகளையெல்லாம் வெளியே அகற்றிக் கொண்டிருப்பீர்கள். நீ நிலையில்லாமல் அலைந்து சபையை மாற்றிக் கொள்வதினால் மேலும் மேலும் குப்பையைத்தான் சேகரித்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், நீங்கள் போகின்ற இடத்தைப் பற்றி சிந்திப்பீர்களானால்; அவிசுவாசங்களையும், புத்திகெட்ட காரியங்களையும் தூக்கிப் போட்டுவிடுவீர்கள். உங்களுக்கு உண்மையான விசுவாசம் இருக்கும். 31நான் மக்களிடத்தில் கூறுவதுண்டு. அவர்கள் என்னிடத்தில் வந்து, “வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கும் சகோதரர் பிரான்ஹாம் நீர் தானா”? என்பார்கள். “ஆம்” என்பேன். அதற்கு அவர்கள், “நல்லது அது எங்கள் விசுவாசத்திற்கு முரண்பாடானது”, என்பார்கள். அப்படியென்றால் உங்களுக்கு விசுவாசமே இல்லை. வேதாகமமானது அவ்விதமாகத் தான் போதிக்கின்றது. மற்றும் அநேகர் வரிசையில் வந்து, “நல்லது எனக்கு எல்லா விசுவாசமும் இருக்கிறது”, என்பார்கள். அப்படியெனில் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஓ‚ அது அவ்விதமாக இல்லை. உண்மையான விசுவாசம் தோல்வியை அறியாது. அதை தோற்கடிக்க முடியாது. மரணம் கூட அதை ஜெயிக்க முடியாது. அது தோல்வியை அறியாது. சோதனையானது தோல்விகளை அறிந்திருக்கிறது. ஆனால், விசுவாசமோ தோல்வியை அறியாது. அது தோற்கடிக்கப்படுவதில்லை. மற்றும் அந்த ஒருவழியில் மாத்திரமே உங்களால் தேவனைப் பிரியப்படுத்தமுடியும். விசுவாசமில்லாமல் தேவனைப் பிரியப்படுத்துவது கூடாத காரியம் என்று எபிரெயர் 11 கூறுகிறது. 32இந்த இடத்திலே கிறிஸ்தவர்கள் அசிங்கமான வார்த்தைகளையும், கொச்சையான மொழியையும் பேசிக் கொண்டு திரிந்து, இன்னும் சபையில் சேர்ந்து கொண்டிருப்பதை என்னால் யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. நீங்கள் அமெரிக்காவை சுற்றித்திரிந்து, அமெரிக்காவிலுள்ள எல்லா கொச்சையான வார்த்தைகளையும் படித்து, வேறொரு தேசத்திற்குச் செல்வதை என்னால் கற்பனை செய்ய முடியுமா? நீ கண்டிப்பாக அப்படிச் செய்யமாட்டாய். நீ என்ன செய்வாய் என்றால் அந்த தேசத்திற்குரிய பாஷையில் சில வார்த்தைகளையாவது கற்றுக் கொள்ள முயற்சி செய்வாய். அது சரியே. 'நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்' என்றாவது கேட்க கற்றுக் கொள்வாய். ஒவ்வொரு கிறிஸ்தவனும் பரலோகத்திற்குரிய பாஷையையும், அங்கே தேவனைத் துதித்து மகிழ்ச்சியாயிருக்க பாடல்களையும் படிப்பது அவன் மேல் விழுந்த கடமையாயிருக்கிறது என நான் விசுவாசிக்கிறேன். சத்தமாகத் துதிப்பதில் உடன்பாடில்லாதவர்களே‚ நீங்கள் அங்கே போகும்போது என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் அந்த இடத்திற்கு சம்பந்தமில்லாதவர்களாய் இருப்பீர்கள். நீங்கள் இப்பொழுதே விசுவாசத்தைப் பெற்று மேற்கொள்வது நலமாயிருக்கும். விசுவாசமே ஜெயமும் அதுவே மேற்கொள்ளுதலுமாய் இருக்கிறது. நீங்கள் இப்படிப்பட்ட அற்பமான காரியங்களை சேகரித்துக் கொண்டு வரமாட்டீர்கள். உங்களிடம் ஜெயம் இருக்கும். நீங்கள் “எப்படி நான் அதைச் செய்வேன், சகோதரன் பிரான்ஹாம்” எனக் கேட்கிறீர்கள்? ஓ‚ அது மிக சுலபமான காரியம். இப்பொழுது இங்கே இந்தக் கூட்டங்களில், எப்படி உங்களை அர்பணிப்பது என்று யோசிக்கிறீர்கள். இந்தக் கட்டிடத்தில் உள்ள அநேகரை நான் அறியேன். இன்னும் சில கூட்டங்களில் ஒருவரைக் கூட எனக்குத் தெரியாது. பல்வேறு விதமான மொழிகள் உண்டு; அவைகளையும் நான் அறியேன். ஆனால், எப்படி இவைகளை அறிகிறேன்? ஒப்புக் கொடுப்பதன் மூலமாகத்தான். உன்னை பரிசுத்த ஆவியானவரிடத்தில் ஒப்புக்கொடுத்து விடு; அப்பொழுது அதற்கு மேல் ஒருபோதும் நீ அல்ல; நீ என்ன பேசப்போகிறாய் என்பதையும் நீ அறியாமல் இருப்பாய்; நீ அவரையே பேச விட்டுவிடு. இது அவ்வளவு எளிமையாக இருக்கிறது. 33உங்களில் அநேகர் மருத்துவர் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் ஒரு மருத்துவரைக் கொண்டிருக்கும் பொழுது அவர் மேல் கண்டிப்பாக நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். மற்றும் உங்களுக்கு ஏதாவது குறைபாடு ஏற்படும்போது நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கிற அந்த வயதான, உத்தமமான மருத்துவரிடத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் அப்படித்தான் செய்தாக வேண்டும். அது நல்லதுதான். பிறகு, உங்களுடைய காரியத்தைக் குறித்து அவரிடம் கூறுவீர்கள். அவர் உங்களை மருத்துவமனையில் சேர்த்திடக் கூறுவாரானால், நீங்கள் வேறெந்த காரியத்தையும் செய்யாமல் நேராக வீட்டிற்குச் சென்று உடைகளை எடுத்துக்கொண்டு, மருத்துவமனைக்கு வந்து விடுவீர்கள். நிச்சயமாகச் செய்வீர்கள். உங்களுக்கு மருத்துவர் மீது கண்டிப்பாக விசுவாசம் இருக்கிறது. நீங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டாம் என அவர் தீர்மானிப்பார் என்றால், ஒரு துண்டுச் சீட்டில் எழுதி, பை நிறைய மாத்திரைகளைத் தருவார். நீங்களும் அந்த மாத்திரையில் என்ன இருக்கிறது என்று அறியாமலே அதைச் சாப்பிடுவீர்கள். 34அப்படியென்றால், தேவனைக் குறித்து என்ன? அவர் உனக்குக் கொடுக்கும் நற்செய்தியின் சில மாத்திரைகளை (Gos-pills) விழுங்குவதற்குப் பயப்படுகிறாய். 'அவருடைய தழும்புகளால் குணமானாய். விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயமாய் இருக்கிறது' இதை விழுங்கி என்ன நடக்கிறது என்று பாருங்கள். அது ஒரு உறுதியான நம்பிக்கை. உங்களுடைய மருத்துவர் மீது என்ன விதமான நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள் என்பதை, அவர் கொடுக்கும் மாத்திரைகளில் என்ன இருக்கிறது என அறியாமல் எடுப்பதின் மூலம் காண்பிக்கிறீர்கள். அறுவை சிகிச்சைக்கு நீங்கள் உங்களை ஒப்புக் கொடுப்பதின் மூலம், மருத்துவர் மேல் உள்ள நம்பிக்கையைக் காண்பிக்கிறீர்கள். அது உங்கள் மருத்துவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கிறது. ஆனால், நீங்கள் கிறிஸ்துவினிடத்தில் வரும்பொழுது, அவருடைய வார்த்தையில் அவரை ஏற்றுக் கொள்வதற்குப் பயப்படுகிறீர்கள். அது எப்படி? “விசுவாசமே ஜெயம்”. உங்களுடைய மருத்துவரிடத்தில் உங்களுடைய பிரச்சனையை ஒப்புக்கொடுப்பதைப் போல், இயேசு கிறிஸ்துவினிடத்தில் இன்றிரவு உங்களுடைய பிரச்சனையை ஒப்புக் கொடுங்கள். “நீர் என்ன வேண்டுமானாலும் எனக்கு தாரும் ஆண்டவரே. நீரே என்னுடைய பிரச்சனைக்கு மருத்துவர்”, என ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது நீங்கள் ஜெயத்தைப் பெற்றுக் கொண்டவர்களாயிருப்பீர்கள். பிறகு ஜெயங்கொள்ளுகிற விசுவாசத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். பிறகு ஒரு போதும் வேறு ஒரு ஜெப வரிசைக்காகத் தேடி அலையமாட்டீர்கள். அது மட்டுமல்லாமல் நீங்கள் எதையும் கூடத் தேட மாட்டீர்கள். அதை நீங்கள் அங்கேயே பெறுவீர்கள். உங்களுடைய எல்லாவற்றுக்கும் அங்கேயே தீர்வு கிடைக்கும். நீங்கள் ஒரு சபையை விட்டு, இன்னொரு சபைக்கு 'அங்கே அது இருக்குமா? இங்கே இது இருக்குமா?' என்று அலைந்து திரியமாட்டீர்கள். அதிலே எல்லாவற்றையும் பெற்றிருப்பீர்கள். நீங்கள் விசுவாசத்தைக் கொண்டிருக்கும்பொழுது, ஜெயத்தைப் பெற்றிருப்பீர்கள். 35இன்றிரவு அமெரிக்காவிற்கு என்ன தேவை என நான் கூறட்டும். மற்றும் இந்த கூடாரத்திற்கு என்ன தேவை என்பதையும் இன்றிரவிலே கூறட்டும். அதாவது நம் மருத்துவராகிய இயேசு வந்து நம்முடைய விசுவாசத்தில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்பதே நமது தேவை. மருத்துவர் உங்களிடத்தில் “உங்களுக்கு ஒரு குடல் வால் அழற்சி இருக்கிறது, அது முழுவதும் நஞ்சாகி விட்டது” ஆகவே, அதை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க வேண்டுமென கூறுவார்; அல்லது இது நாசமடைந்து விட்டது, இதை நீங்கள் எடுத்தாக வேண்டும் என்று சொல்வார். மற்ற உறுப்புகள் சரியாக இயங்குவதற்காக அவர் அதை வெளியே எடுத்துவிடுவார். அப்படியென்றால், இன்று இரவிலே நம்முடைய விசுவாசத்தைக் குறித்ததான காரியம் என்ன? நம்முடைய கேலிக் கூத்துகளும், மோசம்போக்கும் வழிகளும் தவறு எனக் கூறி; தேவன் அவருடைய இருபுறமும் கருக்குள்ள பட்டயமாகிய வார்த்தையாகிய கத்தியை வைத்து நம்மீது அறுவை சிகிச்சை செய்திட நாம் பயப்படுகிறோம். நாம் எல்லா நிழல்களையும் விட்டு தளர்த்தி; கர்த்தருடைய நித்திய வாக்குத்தத்தத்தை நோக்கி பயணம் செய்யவேண்டும். ஓ‚ அப்படி நாம் செய்யும்பொழுது இயேசு நம்முடைய விசுவாசத்தின் மீது ஒரு அறுவை சிகிச்சை செய்து நம்மிடத்திலுள்ள எல்லா அவநம்பிக்கைகளையும், எல்லா பயங்களையும், எல்லா கவலைகளையும், எல்லா பாவத்தையும், இருக்கிற எல்லாவற்றையும் எடுத்துப் போடுவார். நம்முடைய விசுவாசமானது தெளிவாக அறுவை சிகிச்சை செய்யப்படும்பொழுது, நாம் ஒரு புது சிருஷ்டியாக மாறுவோம். பிறகு நாம் வேறுபட்டவர்களாக இருப்போம். நமக்கு ஒரு அறுவை சிகிச்சை தேவையாயிருக்கிறது. 36அந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு நீங்கள் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பீர்களா? அவர் மேல் விசுவாசம் வைப்பீர்களா? தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய வார்த்தையின் படியாக, உம்முடைய வார்த்தையின்படியாக என்று மாற்கு (லூக்கா) 5-ம் அதிகாரத்தில் சீஷர்கள் கூறினது போல கூறுவாயா? “ஆண்டவரே நாங்கள் இராமுழுவதும் பெரிய வலைகளைக் கொண்டு மீன் பிடித்தோம், ஒன்றும் அகப்படவில்லை, ஆனாலும், ஆண்டவரே உம்முடைய வார்த்தையின் படியாக நான் வலையை வீசுகிறேன்”, என்று பேதுரு கூறினான். “ஆண்டவரே‚ நான் ஒரு மீனவன்‚ நிலாவின் அடையாளங்களைக் கொண்டு, அவை எப்பொழுது சிக்கும், எப்பொழுது சிக்காது என்று அறிவேன். எப்பொழுது அவை பள்ளிக்குச் செல்லும், எப்பொழுது அவை செல்லாது என அறிவேன். அது மாத்திரமல்ல; நான் இராமுழுவதும் வலை வீசினேன். மற்றும் என்னுடன் மீன் பிடிப்பில் டாக்டர் பட்டம் பெற்றவர்களும் இருக்கிறார்கள். டாக்டர் மீனவர்கள் நாங்கள்; எங்களுடைய தொழிலை அறிந்திருக்கிறோம். இந்த ஓடையிலே இராமுழுவதும் தேடினோம்; ஒன்றுமே அகப்படவில்லை‚ ஆனாலும், உம்முடைய வார்த்தையின் படியாகநான் வலையை வீசுவேன். ஏனெனில், முதன்மை அறுவை சிகிச்சை நிபுணரே கூறிவிட்டார்‚ முதன்மை மருத்துவர் கூறிவிட்டார்‚” அதன்பிறகு அவர்கள் தங்களுடைய வலைகள் கிழிந்துபோகும் அளவிற்கு அநேக மீன்களைப் பிடித்தார்கள். ஏன், விசுவாசமே ஜெயம். அங்கே ஒரு வேளை ஒரு மீன் கூட இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், தேவன் வாக்குத்தத்தம் செய்வாரானால், அவர் மீன்களை சிருஷ்டித்து அதை அங்கே இருக்கும் படியாகச் செய்வார். 37நீ ஜீவிப்பதற்கு ஒரு வாய்ப்பு கூட இல்லாமல் இருக்கலாம்; நீ ஒரு வேளை புற்று நோயினால் மரித்துக்கொண்டிருக்கலாம்; நீ ஒரு சக்கர நாற்காலியில் முடங்கப்பட்டவனாக இருக்கலாம். ஒரு வேளை நீ முற்றிலுமாக குருடனாக இருக்கலாம். உங்களுடைய தொல்லை என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால்,முதன்மை மருத்துவருடைய மருந்துச் சீட்டை எடுத்துக் கொள்வீர்களானால், நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள்; அப்பொழுது அவைகளை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். நினைவில் கொள்ளுங்கள்‚ விசுவாசமானது எந்தவிதமான கஷ்டமான காரியத்தையும் ஜெயம் கொள்ளும். ஒருவேளை உங்கள் ஆத்துமாவானது முற்றிலுமாய் கறைபட்டு, பாவத்தினால் மிகவும் பாரப்பட்டிருக்கலாம். ஒருவேளை உங்களுடைய கோபப்படக் கூடிய தன்மையையும், ஒருவரைப் பற்றி அவதூராகப் பேசும் காரியத்தையும், தொலைபேசியில் பிறரைப் பற்றி வீணாகப் பேசுகிறதையும் விட்டு வெளியேற வேண்டுமென முயற்சித்திருக்கலாம். உங்களுக்குத் தெரிந்த மட்டும் அதற்கான தீர்வுகளைக் கூடுமானமட்டும் முயற்சித்திருக்கலாம். ஆனால், இன்றிரவு இயேசுகிறிஸ்து உங்களுக்குள் வர அனுமதிப்பீர் களானால்; அவர் உங்களுடைய விசுவாசத்தின் மேல் கிரியைசெய்து, இந்த உலகம் பிறப்பிக்கும் எல்லா காரியத்திற்கும் மேலாக ஏறிச் செல்வதற்கு, அவர் விசுவாசத்தை அருளுவார். ஏனென்றால், 'விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்'. 38ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து, அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது இந்த கட்டிடத்தில் இருக்கும்பொழுது; நீங்கள் எப்படி சந்தேகிக்க முடியும்? “இதோ நான் உலகத்தின் முடிவுபரியந்தமும், சதாகாலமும் நான் உங்களோடு கூட இருப்பேன்”, என்று வார்த்தையானது வாக்குத்தத்தம் செய்திருக்கிறது. அது கர்த்தரால் வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருக்கிறது. தேவன் தன்னுடைய வார்த்தையைக் காத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவர் இதைச் செய்வேன் என வாக்குத்தத்தம் செய்யும் பொழுது அவர் அதைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறார். இப்பொழுது உங்களிடத்தில் பாவம் இருக்குமானால், உங்களுடைய ஜீவியத்தில் ஏதேனும் தவறு இருக்குமானால், நாம் நம்முடைய தலைகளை ஒரு கணம் தாழ்த்தி ஜெபிக்கும் வேளையிலே, அதைக் குறித்து ஒரு விசை நீங்கள் சிந்திக்க விரும்புகிறேன். 39நாம் ஜெபிப்பதற்கு முன்பாக, நான் இந்தக் கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். இந்த கட்டிடத்தில் உள்ள யாராவது ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, பையனோ, சிறுமியோ உங்கள் கரங்களை உயர்த்தி, “ஆண்டவரே என்னால் ஜெயங்கொள்ள முடியாதது போல் காணப்படுகிறது. நான் இப்படிப்பட்டகாரியங்களைச் செய்யக் கூடாது என அறிவேன். நான் இதையும், அதையும் செய்திருக்கக் கூடாது என அறிவேன். ஆனால், இந்த செய்தியைக் கேட்ட பிறகு நீர் இப்பொழுதே என்னுடைய விசுவாசத்தின் மேல் கிரியை செய்ய வேண்டுமென விரும்புகிறேன். நீர் என்னை முற்றிலுமாய் சோதித்து நான் மேற்கொள்ளக் கூடாதபடிக்குத் தடையாயிருக்கிற என் விசுவாசத்தில் உள்ள ஒவ்வொரு சிறு சிறு வியாதிகளையும் அறுவை சிகிச்சை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்”, என கூறுகிறீர்களா? உங்கள் கரங்களை அவருக்கு நேராக உயர்த்துங்கள். உயர்த்துவீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இந்த இடமானது முழுவதுமாக கரங்களால் நிரம்பி இருக்கிறது. நமக்கு தொல்லை கொடுக்கின்ற பாவங்களையும், பாரத்தையும் நாம் ஓரமாக வைத்துவிட்டு; நமது விசுவாசத்தை துவக்கினவரும், முடிக்கிறவருமான இயேசு கிறிஸ்துவை நோக்கி; நமக்கு முன்பாக வைத்திருக்கிற ஓட்டத்தைப் பொறுமையோடே ஓடுவோம். எத்தனை பேர் இங்கு வியாதியோடும் தேவைகளோடும் வந்திருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்தி ஆண்டவரே‚ என்னுடைய விசுவாசத்தின் மேல் கிரியை செய்யும், இன்றிரவு எனக்குத் தேவையுள்ளது என கேட்பீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. விசுவாசமே ஜெயம். நாம் எப்படி விசுவாசத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்? விசுவாசமானது கேள்வியினால் வரும், தேவனுடைய வார்த்தையைக் கேட்பதினால் வரும். பாவ பாரத்தோடும், தேவைகளோடும் வந்திருக்கிறவர்களே, இக்கூடாரத்தின் வழக்கத்தின்படி, நான் பலிபீட அழைப்பைக் கொடுத்து பலிபீடத்தண்டையில் வரும்படியாக அழைக்கப் போதுமான அளவிற்கு இடம் இப்போது இல்லை. இங்கு மக்கள் எல்லா சுவர்களையும் சுற்றி நிற்கிறார்கள். இங்கே பலிபீடத்தின் மேலும் இருக்கிறார்கள். ஆகவே நாம் இப்படியொரு இடத்தில் கண்டிப்பாக பலிபீட அழைப்பைக் கொடுக்க முடியாது. ஆனால், நான் உங்களுக்காக இப்பொழுது ஜெபிக்கப்போகிறேன். நீங்கள் இந்த மணிவேளையில், நான் ஜெபிக்கும்பொழுது கிறிஸ்துவினிடத்தில் உங்களை அர்பணியுங்கள். 40அன்பான தேவனே‚ உம்மை உண்மையாய் தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவரென்ற விசுவாசத்தோடு, இங்கு காத்துக் கொண்டிருக்கிற மனம் திரும்பும் ஆத்துமாக்களின் மேல் உம்முடைய தெய்வீக இரக்கம் இருப்பதாக. நீர் அவர்களிடத்தில் இரக்கமாயிருக்கும்படியாக வேண்டுகிறேன். அவர்களிடத்தில் சந்தேகமெனும் புற்றுநோயோ, கோபமென்னும் புற்றுநோயோ, அவிசுவாசம் என்னும் புற்றுநோயோ, எதுவாயிருந்தாலும் இப்பொழுதே அதை எடுத்துவிட்டு, பரிசுத்த ஆவியை அவர்களுக்குத் தாரும். அவர்களுடைய ஆத்துமாவை உம்முடைய நன்மைகளினால் நிரப்பும். அவர்கள் தங்களுடைய விசுவாசத்தை அறிக்கையிட்டு கரங்களை உயர்த்தி இருக்கும் இந்த வேளையிலே; உம்முடைய இராஜ்யத்திற்கு அவர்களை அபிஷேகம் செய்யும். இரக்கமுள்ள தேவனே‚ அவர்களுக்கு இதைச் செய்யும். அவர்கள் கடலில் மிதந்து, அடித்துச் செல்லும் தங்களுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டார்கள். அவர்கள் இப்பொழுது கப்பல் பணிமேடையிலே; சிறந்த கட்டுமான நிபுனரால் செதுக்கப்படவும், கிறிஸ்துவிற்குள் ஒரு புது சிருஷ்டியாக மாறவும் விரும்புகிறார்கள். அவருடைய ஆவியினால் அதிகாரம் பெற்றவர்களாகவும், உம்முடைய சித்தத்தினால் ஆளுகை செய்யப் படுகிறவர்களாகவும் இருக்க விரும்புகிறார்கள். ஆகையினால் இப்பொழுது அதை அவர்களுக்குத் தரவேண்டும் என, உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் தாழ்மையுடன் கேட்கிறோம் பிதாவே‚ ஆண்டவரே‚ இப்பொழுது அனேக கரங்கள் மேலே உயர்த்தப்பட்டிருக்கிறது. அவர்களில் அநேகர் அனேக இடங்களுக்குக் கடந்து சென்றார்கள் என உணர்ந்திருக்கிறார்கள். மற்றும் அநேக மைல்கள் வாகனத்தை ஓட்டி வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கிறவர் ஒருவர் இருக்கிறார் என்று தேடி வந்திருக்கிறார்கள். ஒருவேளை, வெகுதொலைவிலிருந்து அவர்கள் இங்கு வந்திருக்கலாம். ஆண்டவரே‚ அதை நான் மெச்சிக் கொள்கிறேன். ஆனால், அவர்கள் என்னை உம்முடைய ஊழியகாரன் என்று விசுவாசிக்கவில்லை என்றால் என்ன செய்வது ஆண்டவரே? அப்படியென்றால் அவர்கள் இங்கு வந்திருக்க மாட்டார்கள். ஆண்டவரே‚ அவர்கள் என்னுடைய ஜெபத்தில் விசுவாசம் வைக்கும்படியாக நீர் அனுமதித்திருப்பதினால், நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். 41தேவனாகிய கர்த்தாவே‚ இங்கு இருக்கும் ஒவ்வொருவருக்காகவும் நான் உத்தமத்தோடு ஜெபிக்கிறேன். பரலோகத்தின் மகத்தான தேவன் தாமே, அவர்களுடைய ஜீவியத்தில் உம்முடைய பரிசுத்த ஆவியைக்கொண்டு அசைவாடி, எல்லா அவிசுவாசத்தையும் வெட்டி எடுப்பீராக. விசுவாசமே ஜெயம் என்று அவர்கள் அறிவார்களாக. ஏதோ ஒரு சபையோ, அல்லது ஏதோ பூமிக்குரிய நபரோ அல்லது ஒருகுறிப்பிட்ட மனிதனின் ஜெபமோ, அவையெல்லாம் உதவினாலும், விசுவாசமே ஜெயம் என்று அறிவார்களாக. இங்கு உம்முடைய குமாரனும், எங்களுடைய இரட்சகருமானவர், தன்னுடைய சொந்த தேசத்திற்குச்சென்ற போது, “அங்கே சிலர் இப்படிக் கூறினார்கள். யார் இவன்? இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? அவனையும் அவனுடைய தாயையும் நாம் அறிந்திருக்கிறோம் அல்லவா? அவளுடைய பெயர் மரியாள். அவனுடைய சகோதரிகளும்; யூதாவும், யோசேவும் இங்கே இருக்கிறார்களே‚” என்று அவரைக் குறித்து, அவர்கள் இடறல் அடைந்தார்கள் என்று நாங்கள் வாசிக்கிறோம். அவர் அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டதால், மகத்தான கிரியைகளை செய்யக் கூடாமல் போனது. 42உமக்கு முன்பாக ஒரு நபர் எவ்வளவு தயவு பெற்றவனாக இருந்தாலும், எங்களுடைய சொந்த விசுவாசமே ஜெயமாயிருக்கிறது என்று உணருகிறோம். தேவனே‚ அவர் உயிர்த்தெழுந்தார் என்கிற கொள்கையின் மேல் மையம் கொண்டுள்ள விசுவாசத்தையுடைய இவர்களுக்கு, உம்மை இன்றிரவு காண்பிப்பீராக என்று ஜெபிக்கிறேன். அவர் மரிக்கவில்லை; என்றென்றுமாய் ஜீவிக்கிறார். 'இதோ நான் உலகத்தின் முடிவு பரியந்தமும் சதாகாலமும் நான் உங்களோடு கூட இருப்பேன்' என வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். அதேபோல் அவர் இங்கே இருக்கிறார் என நாங்கள் விசுவாசிக்கிறோம். தேவனே‚ இன்றிரவு நாங்கள் ஜெபிக்கும் வேளையிலே, அவர் தாமே தன்னை எங்கள் மத்தியில் பிரத்தியட்சப்படுத்திக் காண்பிப்பாராக; மற்றும் பரிசுத்த ஆவியானவர் தாமே ஒவ்வொரு இருதயத்தையும் ஆட்கொண்டு, விசுவாசத்தின் மேல் கிரியை செய்வாராக; அப்பொழுது, அவர்கள் வியாதியையும், இடுக்கண்ணையும், நோய்களையும் ஜெயிப்பார்கள். அவர்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்போது ஒரு காரியமும் நடக்கவில்லையென்றாலும்; திடமான விசுவாசத்திலே அது முடிந்தது என்று கூறும் அளவிற்கு விசுவாசத்தை சிருஷ்டிப்பதாக. அதுவே ஜெயமாக இருக்கிறது. அது உலகத்தை மேற்கொள்ளும். நாங்கள் இதை அவருடைய நாமத்தினாலே அவருடைய மகிமைக்காகக் கேட்கிறோம். ஆமென்‚ 43இந்த வாசலானது தெரு வரைக்கும் நெரிசலில் அடைக்கப்பட்டு, இந்தப் பக்கமும் அதே போல் நெருக்கப்பட்டு, இங்கிருக்கும் ஒவ்வொரு ஜன்னல்களிலும் நெருக்கப்பட்டு, இங்கே வாசல்களில் சுற்றிலும் ஆட்கள் இருக்கும் பட்சத்தில் நான் எப்படி ஜெபவரிசையை அழைக்க முடியும் எனக் காண்பது கடினமாக இருக்கிறது. நீர் விருப்பப்பட்டால், ஜெப வரிசையை அழைக்க முயற்சிப்பேன். ஜெப வரிசையை அழைக்க முடியும். ஆனால், இதை நான் கூறட்டும்; அந்த உறுதியை எனக்கே நான் பிரசங்கித்துக்கொண்டேன். நீங்கள் மிக பயபக்தியோடிருந்து, உங்களிடம் உள்ள முழு விசுவாசத்தையும் எடுத்து, மனித விசுவாசமாயிருந்தாலும் சரி; தேவனுடைய கரத்தில் ஒப்படைத்து, “இப்பொழுது, தேவனே‚ என்னால் கொடுக்க முடிந்த இந்தச் சிறிய பங்கை ஏற்றுக்கொள்ளும், உம்முடைய விசுவாசத்தை நான் பெற்றுக்கொள்ளட்டும்”, என்று கூறுங்கள். இந்த மேடையிலிருந்து நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களை நான் அழைக்கும் போது, நீங்கள் இங்கே வராமலேயே உங்களை சுகப்படுத்துவார் என விசுவாசிக்கிறேன். உங்களால் அதை விசுவாசிக்க முடிகிறதா? (சபையார் ஆமென் என்கிறார்கள்) நல்லது‚ உங்களிடத்தில் ஜெப அட்டை இருக்குமானால், அதை வைத்துக் கொள்ளுங்கள். அதை நாம் எப்படியாகிலும் உபயோகப்படுத்தப் போகிறோம் என நாங்கள் விசுவாசிக்கிறோம்... 44இங்கே சில ஜெப அட்டைகள் இன்றிரவும் கொடுக்கப்பட்டிருக்கிறது என பில்லி பால் கூறினது நான் இங்கு உள்ளே வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்னால் என் நினைவுக்கு வந்தது. கடந்த இரவு சிலவற்றைக் கொடுத்திருந்தோம். சிலவற்றை நேற்று இரவு எடுத்து வந்தபோது, அப்போது அங்கிருந்த சிலர் ஜெப அட்டை வேண்டும் என்று கேட்டார்கள் அப்பா‚ ஆகவே, நான் அவர்களுக்கு ஜெப அட்டையைக் கொடுத்திருக்கிறேன் என்றான். நான் அதற்கு, “அதுபரவாயில்லை‚” என்றேன். அதற்கு பில்லி, “ஆனால் நீங்கள் எப்படி ஜெபவரிசையை அழைக்கப் போகிறீர்கள்?” என்றான். அப்பொழுது மக்கள் கூட்டமானது அது மட்டுமாக இருந்தது. இப்பொழுதோ அவர்களெல்லாரும் எல்லா பக்கமும் சுற்றியிருக்கிறார்கள். ஆகையால் ஜெப வரிசையை நடத்துவதற்கு ஒரு வழியும் இல்லை. நீங்கள் இங்கே ஜெபவரிசையில் நிற்கிறதற்கும், அங்கே உட்கார்ந்திருக்கிறதற்கும் வித்தியாசம் என்ன? ஆனால் அந்தக் காரியத்தைச் செய்வதற்குச் சிறிது விசுவாசம் தேவைப்படுகிறது. அதற்கு என்னுடைய விசுவாசமும், உங்களுடைய விசுவாசமும், தேவனுடைய விசுவாசமும் தேவைப்படுகிறது. அவை கலந்த பின்னர் உங்களுடைய விசுவாசமும் என்னுடைய விசுவாசமும் மறைந்து போகும். தேவனுடைய விசுவாசமே மேன்மை பெற்று கிரியைகளைச் செய்யும். 45இதன் அடிப்படையில் நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன், “நீங்கள் இது கர்த்தருடைய வார்த்தை என விசுவாசிக்கிறீர்களா”? (சபையார் ஆமென் என்கிறார்கள்) இது தேவனுடைய வார்த்தை என்றால் அது சத்தியமே‚ அது பொய்யுரையாது. அது தேவனுடைய வார்த்தையாயிருக்குமானால், அது சத்தியமே‚ அவ்விதமாய் இருக்கும் பட்சத்தில், அவர் இங்கே பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் காத்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறார்‚ அந்த வார்த்தையைக் காத்துக் கொள்ள அவர் கடமைப்பட்டிருக்கிறார்‚ நீ ஒரு வேளை லுக்கேமியாவினால் வியாதிப்பட்டு மரித்துக் கொண்டிருப்பாயானால், அல்லது புற்றுநோயினால் மரித்துக் கொண்டிருப்பாயானால், காசநோயானாலும் அல்லது எதுவானாலும்; நீ இந்த மேடைக்கு வரும்போது இங்கு இருக்கிற எல்லா ஊழியக்காரர்களும் உனக்காக ஜெபித்தாலும், உனக்குள் விசுவாசம் இல்லை என்றால்; அது ஒரு காரியத்தையும் உனக்குச் செய்யாது. ஆனால், யாரோ ஒருவர் குணப்பட்டு, அதை தேவன் சுகமாக்கினார் என்று நீ கவனித்திருப்பாயானால்; அல்லது அவர் சுகம் பெற்றேன் என அறிக்கையிட்டாலும்; அது உன்னுடைய விசுவாசத்திற்கு உதவும். ஏனெனில், நீ அவர்கள் சுகமடைந்ததைக் கண்டாய். 46சமீபத்தில் நான் டர்பன் தென் ஆப்பிரிக்காவில் ஜெபித்துக் கொண்டிருக்கையில், ஒருவரை பிரசங்க பீடத்தில் கொண்டு வந்தார்கள். அந்தக் கதை உங்களுக்குத் தெரியும். உங்களில் அநேகருக்கு நான் இதைக் கூறியிருக்கிறேன். அங்கே ஒரு முகமதிய ஸ்திரீ சுகத்தைப் பெற்றாள். கிட்டத்தட்ட இருபது பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள்; இன்னும் அதற்கு அதிகமானோர் அதிலிருந்து வந்திருந்தனர். அங்கேதானே பிறவியிலே கூணி குறுகின ஒருவன் வந்தான். அவன் தன்னுடைய கைகளிலே நடந்து நகர்ந்தான். அவன் ஜூலூ (ZULU) என்னும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் வலது கைக்கும், இடது கைக்கும் வித்தியாசம் கூட தெரியாத நிலையில் இருந்த, அந்த ஆப்பிரிக்க மந்தை மேய்க்கும் கூட்டத்தைச் சேர்ந்தவனிடம் பேச ஆரம்பித்தார். அவன் யார் என்பதைக் கூட கூறினார். அவர்கள் மாந்திரீக வைத்தியரை அங்கே நிறுத்தியிருந்தார்கள். ஆனால், அவர்களோ பிரமித்து “இது என்ன ஒரு புதிய காரியம்” என்று கூறினார்கள்? அப்போது அங்கிருந்த பழங்குடி தலைவர்கள் தங்களுக்கு விசிறிக் கொண்டிருந்த விசிறியை நிறுத்தச் சொன்னார்கள். ஆனால், பரிசுத்த ஆவியானவர் தொடர்ந்து, “நீ வசிக்கும் உன்னுடைய குடிசையிலே, என்னுடைய தேவனின் படமானது சுவரிலே தொங்கவிடப்பட்டிருக்கிறது” என்றார். அங்கே அவனுடைய தாயும், தகப்பனும் அது உண்மையென ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் சாட்சி கொடுத்தனர். தொடர்ந்து, இப்பொழுது உன்னுடைய சதோரன், ஒரு மஞ்சள் ஆடு அல்லது நாயின் மேல் சவாரி செய்து வந்தபோது, அவனுடைய காலில் காயமடைந்து, கக்கத் தண்டுகளைக் கொண்டு நடந்து வந்திருக்கிறான்; அவனும் இந்த கூட்டத்தில் இருக்கிறான்; அவனுடைய விசுவாசம் அதை இப்பொழுது மேற்கொண்டது. அவன் சுகமடைந்தான்“ என்றார். எப்படி தெரியுமா? அந்த வெள்ளைக்காரர், அவனுடைய பாஷையைக் கூட அறியாதவர். அவன் யார் என்பதையும் அவனுக்கு என்ன நடந்தது என்றும் சொல்ல முடிகிறதே என்று கண்டு, அதிர்ச்சி அடைந்தான். அது எப்பேர்பட்ட வல்லமையோ? என்று வியந்தான். 47அந்தச் சிறுவன் மொழி பெயர்ப்பாளர் கூறுவதைக் கேட்டவுடன் தன்னுடைய கக்கத் தண்டுகளை எறிந்துவிட்டு, சந்தோஷத்தில் குதித்து ஓடி வந்தான். இதைப் பார்த்த அவனுடைய சகோதரன்; வலது கைக்கும், இடதுகைக்கும் வித்தியாசம் தெரியாதவன்; நான் அவனைப் பழங்குடி நடனமாட வைக்கப் போகிறேன் என்று நினைத்துக்கொண்டான். அவனுக்குள் ஏதோ ஒரு காரியம் நடந்தது. அவன் தானே அவிசுவாசமெனும் பாவத் தடைகளைத் தாண்டி விட்டான். இதோ நான் நோக்கிப் பார்க்கையில் ஒரு தரிசனம் உண்டானது. அது அவனை தன்னுடைய கால்களில் நிற்கச் சொன்னது. அவன் சொஸ்தமானான். நான் என்ன சொல்கிறேன் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்த அவன்; மொழிப் பெயர்ப்பாளர் சொன்னவுடன் முழுமையாக நின்றான். அவன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு சங்கிலியை நான் பிடித்து, “இயேசு உன்னை சொஸ்தமாக்கினார், எழும்பு” என்றேன். பிறவியிலிருந்து வியாதிப்பட்டிருந்த அவன் இப்பொழுது தன்னுடைய கால்களில் நின்றான். அது மாத்திரமல்ல, அவன் சரியான சிந்தையோடு‚ கண்ணீர் அவனுடைய கறுப்பு நிற வயிற்றில் வழிந்து ஓடியது. இருபத்தைந்தாயிரம் அஞ்ஞானிகள் ஒரே நேரத்தில், சுகமாகுமளவும், கர்த்தருடைய வல்லமை அந்த இடத்தின் மேல் வந்து இறங்கினது. 48அவர்கள் என்ன செய்தார்கள்? மறுநாள் காலையில், நான் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தேன், அந்த நகரத்தின் மேயர் வந்து “அந்த ஜன்னலின் வழியாகப் பாருங்கள், உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது” என்றார். மறுநாள் காலையில் கால்நடையை ஏற்றிச் செல்லும் ஏழு பெரிய வாகனங்கள் (Big Cattle Trucks) முழுவதுமாய், சக்கரநாற்காலிகளும், கக்கத் தண்டங்களும், மற்ற காரியங்களாலும் நிறைந்திருந்தது. அங்கே முந்தைய இரவு கூட்டத்தில் கலந்து கொண்ட ஜூலு, ஷங்கி, பூசுதோ, கோசெத், பழங்குடியினர் எப்போழுதும் ஒருவரோடு ஒருவர் யுத்தத்தில் இருந்தவர்கள்; அன்று தெருவில் சமாதானத்தோடு ஒன்றிணைந்து 'நம்பிடுவேன், நம்பிடுவேன் யாவும் கைக்கூடிடும்' என தங்களுடைய சொந்த பாஷையிலே பாடிக்கொண்டு நடந்து சென்றனர். நான் ஜன்னலிலிருந்து எழுந்து கையை உயர்த்தி அசைத்து, 'ஆச்சரியமான கிருபை, என்ன இனிமையான சத்தம், என்னைப் போன்ற நீசனை இரட்சித்தது' என்று பாடி பதில் அளித்தேன். நான் கர்த்தரை தரிசனத்தில் காணும் மட்டும், அதுவே நான் என் கண்களால் கண்டதில் மகிமையான காட்சி. 49அது என்ன? அது ஏதோ ஒன்றை தூண்டிவிடுகிறது. அந்த மக்கள் ஒன்றும் நிலையில்லாதவர்கள் அல்ல. இதைக் குறித்தெல்லாம் அவர்கள் இதற்கு முன்பு கேள்விப்பட்டதே இல்லை; ஆனால், கேள்விப்பட்டபொழுது, குழந்தையைப் போன்ற எளிமையோடு அதைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்களுக்கு எந்த ஒரு கிரியையும் தேலையில்லை. அவர்கள் அதைக் கண்டு அதன் பின்சென்றனர். அது அவர்களுடையதாயிற்று. அங்கே எந்த ஒரு வித்தியாசத்தையும் காணும்படி ஒருவரும் இல்லை. அது நடந்ததை அவர்கள் கண்டனர். இப்பொழுது இங்கே அமெரிக்க தேசத்தில் உள்ள ஜெபர்சன்வில்லில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்று ஜீவிக்கிறவராக இருப்பாரெனில், இன்றும் மாறாத தேவனாயிருந்து இந்த இரவிலே குருடாயிருக்கும் பிரசங்கிக்கு பார்வை தர வல்லவராயிருக்கிறார். இரத்தப் புற்றுநோயினால் மரித்துக் கொண்டிருந்த சிறுகுழந்தைக்கு சுகமளித்ததும், அதே மாறாத தேவன்தான். மறுநாளிலே மருத்துவர்கள் அவள் நன்றாக இருக்கிறாள் என்றார்கள். 50சமீபத்தில் நான் ஒரு கட்டுரையை வாசித்தேன். இங்குள்ள புத்தகங்களில் ஒன்று என விசுவாசிக்கிறேன். எந்த புத்தகம் என்று நான் உறுதியாக இல்லை. அதை மற்ற பொருட்களோடு திரும்பவும் வைத்து விட்டேன் என நினைக்கிறேன். நான் அப்படி வைத்திருக்கவும் மாட்டேன். ஆனால், ஒரு பத்திரிகையில் அதில் ஒரு பத்தியை வாசித்துக் கொண்டிருந்தேன். ஓ இதோ‚ அது இங்கே இருக்கிறது. என்னுடைய கடைசிக் கூட்டத்தைப்பற்றி பத்திரிகையில் இருந்தது. அந்த கூட்டத்தில் ஒரு ஸ்திரீ கலந்து கொண்டாள். அந்தக் கூட்டம் வேர்மான்டிலுள்ள பெர்லிங்டனில் நடந்தது. அந்த பையன்களிடத்தில் இருந்து அவளால் அன்று இரவு ஒரு ஜெபஅட்டையைப் பெற முடியவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டாள். அன்று ஜீனும், லீயோவும், மற்றும் பில்லியும் அங்கு இருந்தனர். திடீரென்று, நான் ஏன் ஜெப வரிசையில் நிற்க முடியவில்லை என யோசிக்கும் போது, மேடையில் முதல் நபர் வந்தார். அப்பொழுது அவருடைய காரியத்தை, “நீங்கள் திருமதி இன்னார், இன்னார் இந்த குறிப்பிட்ட இடத்திலிருந்து வருகிறீர்கள், சில சில காரியங்கள் நடந்துள்ளது” என வெளிப்படுத்தினது. அந்த நிமிடமே இந்த ஸ்திரீ இருக்கிற தடைகளைத் தாண்டி, “அந்த ஸ்திரீயை எனக்கு தெரியும், அவளைப் பற்றி உரைக்கப்பட்டது உண்மை”, என்று கூறினாள். அவள் அப்படியாக அவளுடைய உள்ளத்தில் நினைத்த போதே, மகத்தான பரிசுத்த ஆவியானவர் என்னை அழைத்துத் திருப்பி, “இங்கிருக்கிற திருமதி. இன்னார், இன்னார் (அவள் மிகவும் பின்னால் இருக்கிறாள், இந்த கட்டிடத்தைப் போன்று இரு மடங்கு தொலைவில்) அங்கு கடைசியில் பச்சை நிற ஆடை அணிந்து இருக்கும் ஸ்திரீ. நீ இன்னார், இன்னார், நீ காக்காய் வலிப்பினால் அவதிப்படுகிறாய். உனக்கு தினமும் நான்கு அல்லது ஐந்து முறையாவது வலிப்பு வருகிறது” என்றேன். அதைக் கேட்ட மாத்திரத்தில் அவள் தன்னுடைய பாதத்தில் குதித்து நின்றாள். அது அவளைப் பற்றியதே‚ அவள் மிகவும் திகைத்து நின்று என்ன செய்வது என அறியாது இருந்தாள். 51தொடர்ந்து நான், “அது மாத்திரமல்ல, உன்னுடைய கணவர் ராணுவ மருத்துவமனையில் இருப்பதினால் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய், கிட்டத்தட்ட அவருடைய வயிற்றில் எல்லாமே அகற்றப்பட்டு இருக்கிறது. இப்பொழுது அந்த வியாதியானது உடம்பின் வேறொரு பாகத்துக்குச் சென்றுவிட்டது. அவர் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்” என்றேன். அவள் கண்ணங்களில் கண்ணீர் மல்க, செய்தித்தாளில் விவரிக்கப்பட்டிருந்தபடி தன்னுடைய கரங்களை உயர்த்தி, “அது உண்மை”, என்றாள். அப்பொழுதுதானே உடனடியாக நான் தரிசனத்தில், அவர் வீட்டிற்கு வருவதைக் கண்டேன். பிறகு நான் “கர்த்தர் உரைக்கிறதாவது, நீ கவலைப்படவேண்டாம். அவர் குணமடைந்து வீடு திரும்புவார்”, என்றேன். மறுநாள் காலையில், அறுவை சிகிச்சைக்கு முன்சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டபோது, அந்த ஹாட்கின்ஸ் நோயினால் (நிணநீர்கட்டி) ஏற்பட்ட பெரிய கட்டிகள் இருப்பதாக கொஞ்சம் கூட என்னால் உணரமுடியவில்லை என்றார். மருத்துவர்களும் தங்களால் ஒரு கட்டியையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றனர். தங்களால் முடிந்த எல்லா சோதனைகளையும் எக்ஸ்ரே (X- Ray) யையும் செய்து பார்த்த போதும்; அவர் பரிபூரண சுகமடைந்திருந்தார். அடுத்த நாள் அவர் வீட்டுக்கு சுக பெலனோடு சென்றார். எப்படி? விசுவாசமே ஜெயம். எந்த ஜெப அட்டையும் இல்லை, யாரும் கைகளை வைத்து ஜெபிக்கவில்லை. அப்படி எதுவும் செய்யவில்லை. ஆனால், விசுவாசமே எல்லாவற்றையும் ஜெயங்கொள்ளுகிற ஜெயம். அதுவே வழி. 52சிகாகோவிலே என்னுடைய கடைசி கூட்டத்தில் மேடையின் மேல் ஒரு மாநிற சகோதரி நின்று கொண்டு இருந்தாள். என்னை மன்னிக்கவும்‚ அவள் ஒரு வெள்ளை நிற ஸ்திரீ என்று நினைக்கிறேன். அவள் மேடையின் மேல் நின்று கொண்டிருந்தாள். முந்தின இரவிலே, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு ஸ்திரீ இருந்தாள், அவள் சகோ. ஓஸ்பார்ன் நடத்தும் 'ஆப்பிரிக்கன் பிளாக் கோஸ்ட்' அழைப்பு கூட்டங்களுக்காக காணிக்கைப் பெட்டியில் அதிகமான பணத்தைக் காணிக்கையாகச் செலுத்துவதை பில்லி பார்த்தான். பிறகு பில்லி என்னிடம், எப்படி அந்த சிறு ஏழையான ஸ்திரீயானவள், புள்ளிகளுள்ள சாதாரண ஆடையோடு இருந்துகொண்டு அவ்வளவு தொகையைக் காணிக்கையாகச் செலுத்தமுடியும் என்று கேட்டான்? அங்கே பில்லி அட்டையை கொடுக்க ஆரம்பித்தபோது, அவள் பில்லியை நோக்கி'தேனே, எனக்கு ஒரு ஜெப அட்டையைக் கொடு“ என்று கேட்டாள். அதற்கு பில்லி, என்னிடம் அட்டை ஏதும் இப்போது இல்லை என்றான். பிறகு அவன் சகோ. ஜெனியிடமோ அல்லது லியோவிடமோ சென்று ஜெப அட்டை இருக்கிறதா என்று கேட்டான். ஆனால், அவர்களிடமும் இல்லை. அதனால் சகோ. பில்லி, அந்த ஸ்திரீயை நோக்கி, சகோதரி, நான் உங்களுக்கு நாளை ஒரு ஜெப அட்டை கொடுக்கிறேன் என்றான். அதற்கு அவள், சரி நல்லது தேனே‚ எனக் கூறி, மேலே மேல் மாடத்தில் (Balcony) ஏறி எங்கோ ஒரு இடத்தில் அமர்ந்தாள். எனக்கு அதைக் குறித்து ஒன்றும் தெரியாது. 53அன்று இரவிலே நான் மேடைக்கு வந்திருந்தபோது, ஒரு ஸ்திரீ மேடைக்கு மேல் இருந்தாள். இதோ அவள் அங்கிருக்கையில் அவள் அந்த தடையைத் தாண்டி, தேவன்அவளுடைய விசுவாசத்தின் மேல் கிரியை செய்யத்தக்க அந்த இடத்திற்கு அவள் வந்தாள். அவள் சரியாக அந்த இடத்தைத் தொட்டவுடன் “அதோ தொலைவிலே மேல்மாடத்தில் அமர்ந்து கொண்டு இருக்கிற அந்த சிறு ஸ்திரீ, இரண்டாவது மேல் மாடத்தில், இரண்டாவது நபராக, சிறிய கட்டங்களைக் கொண்ட ஆடை அணிந்து இருக்கிற அந்த சிறு ஸ்திரீ, அவளுடைய பெயர் திருமதி. இன்னார், இன்னார். அவள் இரயிலில் ”தபால் அனுப்புனராக“ பணிபுரியும் ஒரு காது கேளாதவரான தன்னுடைய கணவருக்காக ஜெபித்துக் கொண்டிருந்தவள்”, என்றார். அதைக் கேட்டதும் அவள் ஏறக்குறைய மயங்கி விழுந்துவிட்டாள். அவள் ஒரு லூத்தரன் சபையைச் சேர்ந்தவள். பின்பு தேவன், “கர்த்தர் உரைக்கிறதாவது, அவர் சுகமானார்‚” என்றார். அவள் அன்றிரவு வீட்டிற்குச் சென்றபொழுது அவளுடைய கணவர் கதவருகே மகிழ்ச்சியாக நின்று கொண்டு இருந்தார். அதே நிமிடத்தில் அவருக்கு, “அனுப்புனரின்” அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு இருக்கும்பொழுதே அவருடைய காது திறக்கப்பட்டது. 54அதை அங்கு அமர்ந்து இருக்கிற அந்த கறுப்புநிற ஸ்திரீ அதை கண்டு விசுவாசித்தாள். அவள், பத்து வருடமாக லிட்டில் ராக் என்ற இடத்திலுள்ள மனநோயாளியை குணப்படுத்தும் மருத்துவ மனையில் மனநிலை பாதிக்கப்பட்டவளாக காப்புமனையில் இருந்து வந்தஅவளுடைய சகோதரிக்காக விசுவாசித்துக் கொண்டிருந்தாள். பின்பு பரிசுத்த ஆவியானவர், அவளிடத்தில் வந்து, அவள் யார் என்றும்,அவளுடைய சகோதரி யார் என்றும் கூறினார். தொடர்ந்து அவள் பித்து வெறிபிடித்தவள் என்றும் சீறி எழுகிறவள் என்றும், பத்து வருடமாக சுவற்றில் தன் தலையை மோதிக் கொள்கிறாள் என்றும் கூறினார். ஆனால், “கர்த்தர் உரைக்கிறதாவது, அவள் குணமானாள்”. மறுநாள் காலையில், அந்த கதவின் வழியாகச் சென்ற அந்த காப்பாளரிடம், மனநிலைபாதிக்கப்பட்டிருந்த அந்த சகோதரி, தன்னுடைய சரியான மனநிலையுடன் கதவின் ஓரத்தில் நின்று கொண்டு தன்னை வெளியே விடும்படியாகக் கெஞ்சிக் கொண்டிருந்தாள். சிகாகோவில் இருக்கும் தன்னுடைய சகோதரிக்கு தான் சுகமானதைக் குறித்து தகவல் அனுப்பினாள். அதைக் கேட்டவுடன் இந்த ஸ்திரீ, “இரக்கமுள்ள தேவனே! இதுதான் கடந்த இரவில் மேடையிலிருந்து உரைக்கப்பட்டது”, என்றாள். பிறகு இவள், அன்பே, உன்னிடம் போதுமான பணமில்லை என்று எனக்குத் தெரியும், ஆகையால் நான் உனக்கு இப்பொழுதே விமான பயணச்சீட்டை அனுப்பி வைக்கிறேன். உடனடியாகப் புறப்பட்டு வா; நாளை இரவில் கூட்டமானது முடிவு பெறுகிறது என்றாள். பத்து வருடமாக மனநிலை காப்பகத்தில் (மருத்துவமனையில்) இருந்தவள் மறுநாள் இரவிலேயே மேடையின் மேல் நின்று சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நன்றிகளை ஏறெடுத்தாள். அது என்ன? அவளுடைய சகோதரி, உலகத்தின் காரியங்களிலிருந்து உடைத்து ஊடுருவிச் சென்றாள். உலகத்தின் காரியங்கள் என்று கூறும்பொழுது, புகைபிடித்தலோ, குடித்தலோ, மற்றும் சினிமா பார்ப்பதோ மாத்திரம் அல்ல, அவிசுவாசத்தையே பொருட்படுத்துகிறேன். அவள் தன்னுடைய விசுவாசத்தினாலே மேற்கொள்ளுமட்டுமாக எல்லாவற்றையும் கடந்து வந்தாள். அவள், “தேவனால் ஒரு வெள்ளை ஸ்திரீக்கு அதைச் செய்யக் கூடுமானால், கறுப்பு நிற ஸ்திரீயாகிய எனக்கும் அதைச் செய்யமுடியும் என்றாள்”. தேவன் அதைச் செய்தார். நம்முடைய விசுவாசமானது சந்தேகத்தை ஜெயங்கொள்ளும் பொழுதெல்லாம், தேவன் அதைச் செய்வார். அது எவ்வளவு மோசமாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, ஓ‚ அவர் ஜீவிக்கிறார்‚ 55இங்கிருப்பவர்களில் யாராவது சிகாகோவில் அன்றிரவு அந்த ஸ்திரீயின் சாட்சியைக் கேட்டவர்கள் உண்டா? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். நல்லது, ஆம், அநேகர் இங்கே சுற்றிலும் இருக்கிறீர்கள். நிச்சயமாக, இவ்வளவு காலம் அந்த ஸ்திரீ மனநிலை மருத்துவமனையில் இருந்தாள். அது என்ன? விசுவாசமே ஜெயம். இப்பொழுது, அதே இயேசு இன்றிரவிலே நம்முடன் இருப்பாரானால் நான் என்னுடைய விசுவாசத்தை, அவருடைய வாக்குத்தத்தத்தின் மேல் சார்ந்திருக்க வைக்கும் பட்சத்தில் அவர் திரும்ப வந்து அதே காரியத்தைச் செய்வார். உங்களுடைய விசுவாசம் அவருடைய வாக்குத்தத்தத்தின் மேல் சார்ந்திருக்கும் போது அவர் அதையே செய்வார். அங்கே கூட்டத்தார் மத்தியில்உங்களில் யார் ஒருவருக்காவது அவர் அதைச் செய்வார் என்றால்; அவர் இன்னுமாக ஜீவிக்கிறார் என நீங்கள் விசுவாசிப்பீர்களா? அவர் பூமியில் இருக்கும்பொழுது இந்த விதத்தில் தான் அவர் செய்தாரா? அப்போஸ்தலர்கள் இந்த வழியில் தான் செய்தார்களா? பவுல் அந்த மனிதனை நோக்கிப் பார்த்தபோதும்.... இயேசு கிணற்றண்டையில் ஸ்திரீயோடு இருந்தபொழுது, ஏன், ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு விட்டுப் போய் உட்கார்ந்துவிட்டாள். அவரோ திரும்பிப் பார்த்து, யார் என்னைத் தொட்டது என்றார்? தொட்டது யார் என்று தெரியவில்லை. ஆகையால் தான் “யார் என்னைத் தொட்டது” என்றார். எல்லோரும் மறுக்க, அவர், “நான் பலவீனமானேன், என்னிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டது”, என்றார். பிறகு தன்னைத் தொட்ட ஸ்திரீயைக் கண்டுபிடிக்கும் மட்டும் சுற்றிலும் பார்த்தார். அவளுக்கு உதிரப்போக்கு இருந்தது. அவர் அவளிடத்தில், “உன்னுடைய விசுவாசத்திற்கு ஜெயம் கிடைத்தது”, என்றார். 56அது என்ன? அவர், “நான் உன்னை சுகமாக்கினேன்” என்று ஒருபோதும் சொல்லவில்லை. அவர் உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். நீ என்ன செய்தாய்? உன்னிடத்தில் மேற்கொள்கிற, ஜெயங்கொள்ளுகிற, எல்லா அவிசுவாசத்தையும் வீழ்த்தின விசுவாசத்தை நீ பெற்றிருக்கிறாய். ஆகையால் அவள் தன்னுடைய இருதயத்தில் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாவது தொட்டேனாகில் நான் சுகமாவேன் என்று சொல்லிக் கொண்டாள். அவள் அதைச் செய்வதற்கு அவளுடைய சொந்த சிந்தையில் ஏதாவது ஒரு காரியத்தைப் பெற்றிருக்கவேண்டும். அன்று அவர் செய்த அதே காரியத்தை திரும்பவும் இந்தநாளிலே செய்வார் என்று அவருடைய சொந்த வார்த்தையே கோருகிறது. “இன்னும் கொஞ்சக் காலம் இந்த உலகம் என்னைக் காணாது. ஆனால், நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் செய்கிற கிரியைகளைத் தானும்செய்வான், நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியால் இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்”. இதோ, நாம் இங்கே இந்த கடைசி நாளிலே ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். இயேசு இங்கே இருக்கிறார். நாம் ஜெபிக்கலாம். நாம் விசுவாசிப்போமாக. நான் ஜெபிக்கும் போது விசுவாசியுங்கள். 57கர்த்தாவே, இங்கே இதோ ஒரு கூட்ட மக்கள் இருக்கிறார்கள். நீர் ஒரு மகத்தான தேவன். வேதத்தில் திரள்கூட்டத்தாரை நீர் சுகமாக்கினதைக் காண்கிறோம். இஸ்ரவேலர்களின் யாத்திரையின் போது, மோசேயின் வழி நடத்துதலிலே கடந்து வந்தவர்களில் ஒருவரும் பெலவீனர்களாய் இருந்ததில்லை. ஆண்டவரே‚ நீரே மகத்தான மருத்துவர். நீரே அந்த மகத்தான அறுவை சிகிச்சையாளர். இப்பொழுது ஆண்டவரே, இன்றிரவிலே தங்களுடைய சரீரத்திலோ அல்லது ஆத்துமாவிலோ வியாதியாய் இருக்கிற இந்த மக்கள், மகத்தான வைத்தியராகிய உம்மிடத்தில் தங்களுடைய காரியங்களை ஒப்புவிப்பார்களாக. பிதாவே, நீர் தாமே அவர்களிடத்தில் இருக்கும் சந்தேகமானது வெட்டி எடுக்கப்படத்தக்கதாக அறுவை சிகிச்சை செய்தருளும். உம்முடைய வார்த்தையானது நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறீர் என்று கூறுகிறது. நீர் தாமே அந்த கத்தியை உபபோகிக்கும் படியாக நாங்கள் ஜெபிக்கிறோம். அந்த கத்தியைக் கொண்டு வந்து நீர் இன்றும் மாறாதவராய் இருக்கிறீர் என்பதை வெளிப்படுத்தும். நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன் என்றீர்; மற்றும் ஆண்டவரே‚ நீர் இங்கே இருக்கிறீர் என்பதை மக்கள் காணும் போது, பாவத்திற்கும் எல்லா வியாதிகளுக்கும் மேலாக இந்த கட்டிடத்திலுள்ள அவர்களுடைய விசுவாசம் மேலே எழும்பி அவர்கள் சுகமாவார்களாக. இவைகளை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம்.ஆமென். 58என்னை ஒரு ஸ்தானத்திற்குள்ளாக அது பொறுத்துகிறதை உங்களால் உணர்ந்து கொள்ள அல்லது மெச்சிக்கொள்ள முடிகிறதா? இப்பொழுது இங்கே கவனியுங்கள். இருநூற்று ஐம்பது அல்லது அதற்கும் மேலான நபர்கள் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் என யூகிக்கிறேன். ஆம்‚ அதிகமாய் இருக்கிறீர்கள் என யூகிக்கிறேன். எனக்குத் தெரியவில்லை. ஆனால், இங்கு ஒரு பெரிய கூட்டத்தினர் இருக்கிறீர்கள். எனக்கு தெரியவில்லை. அவருக்கு என்னைத் தெரியாது என்றும், என்னிடத்தில் உள்ள தவறு என்ன என்று அவருக்குத் தெரியாது என்றும் சொல்லுகிறவர்கள் இங்கிருக்கிறவர்களில் எத்தனை பேர்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். ஆம் ஐயா? நல்லது, அநேகர் எல்லா இடத்திலும் மக்கள் இருக்கிறார்கள். நிச்சயமாக நான் அறியேன், ஆனால் அவர் அறிவார். இப்பொழுது நீங்கள் அந்த ஸ்திரீ கொண்டிருந்த அதே விசுவாசத்தில் உங்களை அவருக்கு அர்ப்பணித்து அவர் உங்களிடத்தில் பேசுவார் என்றால் அவரை நீங்கள் விசுவாசிப்பீர்களா? எந்த காரியமும் நிரூபிக்கப்பட்டிருந்தால், அது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மையே. 59யாராவது ஒருவர் இங்கே வந்து, “என்னிடம் (கேன்சர்) புற்றுநோய்க்குத் தீர்வு உண்டு”, என்றும், மோசமான சூழ்நிலையை அடைந்த ஒரு புற்றுநோயை அவர் எடுத்து மருத்துவர்களை அழைத்து, புற்றுநோயை சுகப்படுத்த முடியும் என்றும் நிரூபிப்பாரானால், உலகத்தில் உள்ள அனைவரும் அந்த சுகத்திற்காக ஓடி வருவார்கள். ஆம் சகோதரரே, நான் இயேசுகிறிஸ்து அநேக புற்று நோய்களை சுகமாக்கினதைக் கண்டிருக்கிறேன், ஆனால் அவர் ஒன்றை மட்டும் தான் கேட்டார், “நீ விசுவாசிப்பாயானால்” அதுதான் கடினமான காரியமாகத் தோன்றுகிறது. அவர் குருடரின் கண்களைத் திறப்பதைக் கண்டிருக்கிறேன், முடவர்களை நடக்கச் செய்ததையும், மரித்துவிட்டார் என்று மருத்துவர்கள் அறிக்கை கொடுத்த பின்னும் அவர்களை உயிரோடு எழுப்பினதையும் கண்டிருக்கிறேன். அவர் அநேக காரியங்களைச் செய்திருக்கிறார். அவைகளில் நான் பார்த்த காரியத்தை மாத்திரம் எழுதவேண்டும் என்றால் எவ்வளவு புத்தகங்கள் எழுதினாலும் போதாது. இருப்பினும் விசுவாசிக்கச் செய்வது மிகக் கடினமாக இருக்கிறது. 60இப்பொழுது இங்கு இருக்கிற ஒவ்வொரு வியாதியஸ்தர்களும், உங்களால் முடிந்த வரைக்கும் பயபக்தியாய் இருங்கள். நான் உணர்ச்சிவசப்படுதலில் அதிக நம்பிக்கையுள்ளவன். உணர்ச்சி இல்லாதயாதொன்றும் செத்ததே என்று விசுவாசிக்கிறேன். உங்களுடைய பக்தியில் யாதொருஉணர்ச்சியும் இல்லையெனில் அதைப் புதைப்பது நலமாயிருக்கும். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு. நீங்கள் என்னிடத்தில் வந்து, “சகோதரன் பிரான்ஹாம், எனக்கு ஒரு நூறு டாலர் மிகவும் அவசரமாகத் தேவை” என்று கேட்டு, நான்உங்களுக்கு அதைக் கொடுக்க முடியும் என்ற பட்சத்தில்; நீங்கள் மிக பவ்வியமாக என்னிடத்தில் வந்து “சகோதரர் பிரான்ஹாம், எனக்கு அவசரமாக நூறு டாலர்கள் தேவைப்படுகிறது” என்பீர்கள். மற்றும் என்னுடைய பாக்கெட்டில் நூறு டாலர்கள் வைத்திருக்கிறேன் என்று அறிந்திருக்கிறீர்கள்; மேலும், அந்த நூறு டாலர்களை கொடுப்பதற்கு நான் உங்கள் மேல் கருணை வைத்தாலொழிய அதைக் கொடுக்கமுடியாது என்று அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது அதை பெறும்படிக்கு மிக பயபக்தியோடு, எதிர்பார்த்து நின்று கொண்டு இருப்பீPர்கள். பிறகு நான் உங்களுக்கு அந்த நூறு டாலர்களைக் கொடுக்கும் போது, உங்களால் முடிந்த அளவு மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வீர்கள். ஏனெனில், அந்த நூறு டாலர்களை உங்களுடைய கரங்களில் பெற்றிருக்கிறீர்கள். பாருங்கள்‚ ஆகவே, நீங்கள் வரும்பொழுது மரியாதையுடன் என்னிடத்தில் வாருங்கள்; கூச்சலிட்டு என்னிடம் வந்து நூறு டாலர்களைக் கேட்காதீர்கள். நீங்கள் சொல்வது எனக்கு புரியாமல் போய்விடும். ஆனால், நீங்கள் வந்து என்னிடத்தில் கேட்டு, நான் உங்களுக்கு நூறு டாலர் கொடுத்தபின்பு கூச்சலிடுங்கள். 61நாம் கர்த்தரிடத்தில் வந்து, சுவர்களுக்கு வெளியேயும், உள்ளேயும், எங்கேயிருந்தாலும் பரவாயில்லை. அவருடைய பரிசுத்த ஆவியை அசைவாடும் படியாக கேட்டுக் கொள்வோம். நீங்கள் எங்கே நின்று கொண்டிருந்தாலும் அதைக் குறித்து எனக்கு அக்கரையில்லை. எங்கே இருந்தாலும் சரி எனக்கு அக்கரையில்லை. ஒரு வேளை தேசத்தின் தொலை தூரங்களில் உள்ள யாராவது ஒருவருக்காக நீங்கள் ஜெபித்துக் கொண்டிருப்பீர்களானாலும், அதற்காக அவர் செயல்படுவார். நாம் அதைப் பார்க்கலாம். என்னை சோதித்துப் பாருங்கள் என்று தேவன் சொன்னார். அவர் தேவன் தானா இல்லையா என்று நிரூபிப்பதற்கு அதுவே ஒரு நல்ல வழி. என்னை சோதித்துப் பாருங்கள் என்று கர்த்தர் உரைக்கிறார். இப்பொழுது, அவர் தேவனாயிருப்பாரானால்‚ அவர் தேவனாகத் தான் இருக்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அப்படியென்றால் அவர் அந்நாளிலே செய்த அதே காரியங்களை இங்கே இன்றிரவிலே நிகழ்த்தும்படியாக வேண்டிக் கொள்ளலாம். அப்போது நீங்கள் இங்கே வரவேண்டியஅவசியம் இராது. இப்போது இந்த கட்டிடத்தில் உள்ள எனக்கு தெரிந்த மூன்று வெவ்வேறு நபர்களுக்காவது நடக்குமென்றால் அதை ஒரு பொருட்டாக நான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஆகையால் எனக்கு தெரியாத யாரோ ஒரு நபருக்கு நடந்தேறவேண்டும். 62வியாதிகளை அறிந்த வரைக்கும், வியாதியாயிருக்கிறவர்களில் ஒருவர் மாத்திரமே எனக்குத் தெரிந்த நபராக இங்கு இருக்கிறார். அது ஒரு வியாதி அல்ல. அது என்னுடைய நல்ல இனிமையான சிறிய நண்பர் ஈடித் ரைட் அவர்கள். அவள் பின்னே அமர்ந்து இருக்கிறாள். எனக்கு அவளைத் தெரியும், அவள் அநேக வருடங்களாக அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். நாங்கள் அவளுக்காக ஜெபித்தோம், அந்த வலியோடு கூட அவள் சென்றாள். கர்த்தர் அவளுடைய இடுக்கண்ணிலிருந்து அவளை விடுவிக்கவே இல்லை. எனக்கு ஈடித்திடம் என்ன பெலவீனம் இருக்கிறது என்பதை அறிவேன். அதைத் தவிர இங்கிருக்கிற யாரையும் எனக்குத் தெரியாது. என்ன வியாதி இருக்கிறது என்றும் எனக்குத் தெரியாது. ஆனால் என்னை உங்களுக்குத் தெரியுமானால், அது நான் அல்ல; அவர் கர்த்தர் என்பதை அறியுங்கள். இப்பொழுது நீங்கள் ஜெபியுங்கள், நானும் ஜெபிக்கிறேன். நாம் வெறுமனே கர்த்தரை விசுவாசிப்போம். இப்பொழுது சகோதரி. கெர்டி, உங்களால் முடிந்தவரை 'மகத்தான வைத்தியர், இப்பொழுது நம் அருகில் இருக்கிறார், கருணையுள்ள இயேசு', - பாடலை மெதுவாக இசைப்பாயாக. 63நான் இங்கு என்னுடைய நண்பர் சகோ. பேங்க்ஸ் உட்ஸ் -ஐ நோக்கிப் பார்க்கிறேன். சகோ. பேங்க்ஸ் உட்ஸ் அவர்கள், இங்கே இந்த கூடாரத்தில் தர்மகர்த்தாக்களில் ஒருவர் என எவரும் அறிந்ததொன்று. ஆனால், அவர் இதற்கு முன்பாக யெகோவா சாட்சிக்காரராக இருந்தார். அதுவே அவருக்கு நிச்சயமானதாக இருந்தது. ஆனால், லூயிவில்லுக்கு அவர் வந்தபோது கர்த்தர் செய்த காரியத்தைக் கண்டார். அவருக்கு போலியோ நோயினால் ஊனமுற்ற ஒரு மகன் இருந்தான். அந்த குழந்தைக்குஒரு கால் மேலே இழுக்கப்பட்டிருந்தது. அவர் தொடர்ந்து கூட்டங்களுக்கு வந்து கொண்டிருந்தார். அது எனக்குத் தெரியாது. அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. நான் சுவீடன் நாட்டிலிருந்து திரும்பி வந்தேன்.கட்டிடத்தின் பின்னாக இருந்த அந்த சிறுவனை கர்த்தராகிய இயேசு டேவிட் என பெயர் சொல்லி அழைத்து சுகப்படுத்தினார். இன்று அந்தப் பையனுக்கு, எந்தக் கால் முடக்குவாதத்திலிருந்து குணமானது என்று அறிவது கடினமாக இருக்கும். பார்த்தீர்களா‚ ஓ‚ நூற்றுக்கணக்கான காட்சிகள் உண்டு, நீங்கள் விசுவாசித்தால் மட்டும் போதும்‚ 64இப்பொழுது இங்கு ஆமிஷ் குழுவைச் சார்ந்த மக்கள் (Amish) அல்லது மெனோநைட் (Mennonite) மக்கள் குழுவைச் சார்ந்த சிறு ஸ்திரீகள் தொப்பிகளை அணிந்துகொண்டு சிலர் இருக்கிறார்கள் என நம்புகிறேன். இவர்களை நான் பார்க்கும் போது அந்நாளில் நடந்த சம்பவம் ஒன்று என்னுடைய ஞாபகத்திற்கு வருகிறது. இது அந்த சம்பவத்தை எனக்கு நினைப்பூட்டுகிறது. நான் வேயின் கோட்டை (flat wayne) இந்தியானாவில் இருந்தபோது, ஒரு மெனோநைட் அல்லது ஆமிஷ் குழுவைச் சார்ந்த ஒரு பெண் என நினைக்கிறேன்; அவள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டாள். அது ஒன்று மெனோநைட் அல்லது ஆமிஷ் என நினைக்கிறேன். ஏதாவது ஒன்றாக இருக்கவேண்டும். அவள் ஒரு அன்பான பெண். அவள் “மகத்தான வைத்தியர் நம் அருகில் இருக்கிறார்; அவர் கருணையுள்ள இயேசு” என்ற பாடலை வாசித்துக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு முடமான குழந்தை என்னுடைய கரங்களில் கொடுக்கப்பட்டிருந்தது, நான் ஜெபித்தபோது, அந்த சிறு குழந்தை சுகமடைந்தது. அது என்னுடைய கரங்களில் இருந்து எகிறி, குதித்து மேடையின் மீது ஓடினது. இதைக் கண்ட அந்த குழந்தையின் தாயார் மயங்கி விழுந்தாள். அந்த ஆமிஷ் அல்லது மெனோநைட் பெண் அந்த ஸ்திரீயை அறிந்திருந்தாள், பரிசுத்த ஆவியானவர் அந்த பெண்னைத் தாக்கினவுடன் அவள் கத்த ஆரம்பித்துவிட்டாள். அவள் தன்னுடைய கரங்களை உயர்த்தி பியானோ வாசிப்பதை விட்டுவிட்டு ஓடிவிட்டாள். ஆனால், அந்த பியானோவோ நிறுத்தாமல், அந்த “மகத்தான வைத்தியர் நம் அருகில் இருக்கிறார்; அவர் கருணையுள்ள இயேசு” என்ற பாடலின் இசை குறியீடு சிறிதும் தவறாமல் தானாக வாசித்துக் கொண்டே இருந்தது. மக்கள் எல்லா பக்கத்திலிருந்தும் அந்த வழியின் அருகே வந்து கூட்டமாக கூடினர். அந்த வெள்ளை பட்டன்களோ மேலும் கீழுமாக அழுத்திக் கொண்டு “மகத்தான மருத்துவர் நம் அருகில் இருக்கிறார்; அவர் கருணையுள்ள இயேசு” என்று இசைத்துக் கொண்டே இருந்தது. அங்கே கூடியிருந்த மக்கள் தரையிலேயும் மற்றும் புறங்களிலும் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தினாலே நடுக்கத்தோடு சாஷ்டாங்கமாய் விழுந்தனர். அவர் இன்றும் ஜீவிக்கிறார், இன்னும் இயேசுவானவரே‚. 65இப்பொழுது நாம் அந்தப் பாடலை ஒரு நிமிடம் வாயை மூடி ரீங்காரமிட்டுப் பாடுவோம். அதன் பிறகு கர்த்தர் என்ன செய்யப் போகிறார் என பார்ப்போம். இப்பொழுது எல்லோரும் விசுவாசத்தில் நிலவரப்பட்டு, முழு இருதயத்தோடு விசுவாசமாய் நோக்கிப் பார்த்துக் கொண்டிருங்கள். மகத்தான வைத்தியர்; இப்பொழுது நம் அருகில் இருக்கிறார்.... கர்த்தராகிய இயேசுவே, இவைகளை அருளும் ஆண்டவரே... (சகோதரன் பிரான்ஹாம் அமைதியாக ஜெபிக்கிறார்) .... ஓ, இயேசுவின் சத்தத்தை கேளுங்கள், இருதயங்கள் களிகூறும், சிராப் பாடலில், ஒர் இனிமை இனிமை...... இப்பொழுது வியாதியஸ்தர்களே! நீங்கள் அனைவரும் உங்களுடைய எல்லா அவிசுவாசத்தையும் களைந்து எறியுங்கள்‚ உங்களில் அநேகர் இதற்கு முன்பு இதைப் பார்க்கவில்லை என்றாலும், “எப்படியாகிலும் நான் இதை விசுவாசிக்கிறேன்”, எனக் கூறுங்கள். இயேசுவே மகத்தான இயேசுவே‚ (சகோ. பிரான்ஹாம், “மகத்தான மருத்துவர்” என்ற பாடலை முனங்குகிறார்) 66நான் மதவெறிபிடித்தவனாக இல்லை என நம்புகிறேன். ஆனால், இப்பொழுது என்னுடைய அறைக்குள்ளாகச் சென்று, மிகவும் ரகசியமான அறைக்குள் பிரவேசித்து; கதவுகளை பூட்டிக் கொள்வதைப் போல் இருக்கிறது. இப்போது என்னைச் சுற்றியிருக்கிற இந்த கூட்டத்தினரிடமிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். பார்த்தீர்களா? “அந்தரங்கத்தில் இருக்கும் உன் பிதாவை நோக்கி, ஜெபம் பண்ணு, அப்பொழுது அந்தரங்கத்தைப் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்”. கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர், தட்டுங்கள் திறக்கப்படும். தேடுகிற எவனும் கண்டடைகிறான். அங்கே இருக்கும் அந்த படத்தைப் பாருங்கள், அந்த வெளிச்சம்; ஒளிவட்டம்; அது போலவே இங்கிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.அது வெகு தொலைவில் இல்லை. அதுதான் எண்ணங்களைப் பகுத்தறிகிறது. அது கிறிஸ்து. “நான் தேவனிடத்திலிருந்து வந்தேன், தேவனிடத்திற்கே திரும்பப் போகிறேன்”. அவர் வந்து மறுபடியும் எப்படி இருந்தாரோ அப்படியே திரும்பச் சென்றுவிட்டார். அவர் திரும்ப வரும்பொழுது, கர்த்தாராகிய இயேசு கிறிஸ்து மாமிச சரீரத்தில் இருந்ததைப் போலவே இருப்பார். 67நீங்கள் ஒருவேளை இப்படிச் சொல்லலாம், “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்”. என்னை நான் விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் இங்கே வெறுமனே நின்று கொண்டு இருக்கிறேன். இப்பொழுது, இது ஒரு காட்சிக்காக அல்ல. இல்லை ஐயா? நீர் அப்படி நினைக்க வேண்டாம். அப்படி நினைத்தால் ஒரு மோசமான நிலைமைக்குள் செல்வீர்கள். அது எதற்குள்ளாகவோ செல்ல பலவந்தம் பண்ணி முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தேவனுடைய வார்த்தையானது நிரூபிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. அவர் “அப்படியாக இருந்தார்” என நான் கூறினேன். அவர் அப்படி இல்லையென்றால் என்னவாகும்? அவர் எப்பொழுதும் தன் வார்த்தையைக் காத்துக் கொள்கிறார். எனக்கு அதைக் குறித்து பயமேதுமில்லை. யாராவது ஒருவர் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை கண்டிப்பாகத் தொடுவார்கள். அவர் சரியாக இப்பொழுதே “நம்முடைய பலவீனமான உணர்வுகளைக் கொண்டு தொடப்படக் கூடிய பிரதானஆசாரியராக நமக்கு இருக்கிறார்” என்றுவேதாகமம் கூறுகிறது. 68அங்கே நீல நிற ஆடை அணிந்திருக்கிற ஸ்திரீயே‚ நீ என்னை மிக உத்தமமாக பார்த்துக் கொண்டிருக்கிறாய்‚ உன்னை எனக்குத் தெரியாது. நான் உன்னைக் கண்டதில்லை என விசுவாசிக்கிறேன். இங்குள்ள எவராவது தங்கள் விசுவாசத்தைக் கொண்டு என்னைத் தொட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அது உதவியிருக்கும். ஆனால், உனக்குத் தேவன் தேவையாக இருக்கிறாரா? நான் உனக்கு ஒரு அன்னியன் என்றால், உன்னுடைய கரத்தை மேலே உயர்த்து. உன்னை எனக்குத் தெரியாது, ஆனால் என்னை உனக்குத் தெரியும். சரி நல்லது, நீ இங்கே எதற்காக இருக்கிறாய் என்பதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை. எனக்கு தெரிந்தமட்டும் நான் என்னுடைய வாழ்க்கையில் உன்னை கண்டதேயில்லை. நீ ஒரு வேளை என்னுடைய கூட்டங்களில் எங்கேயாவது கலந்து கொண்டிருக்கலாம். கர்த்தராகிய இயேசு மாத்திரம் உன் பிரச்சனை என்ன என்று சொல்வாரானால், நீ அதை விசுவாசிப்பாயா? அது சத்தியமாயிருந்தால் நீ அதை விசுவாசிக்க வேண்டும். அது மற்றவர்களுக்கு கிரியை செய்யும் படி விசுவாசத்தைப் பெற வழிகொடுக்கக் கூடும். பாருங்கள், எனக்குத் தெரியவில்லை. நீ அங்கேயே உட்கார்ந்து என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டு இருந்ததைக் கண்டேன். நீ கவனம் சிதறாமல் உன்னுடைய கண்கள் என்னையே நோக்கிக் கொண்டிருந்தது. நீ நெருங்கியுள்ளாய். இங்கே முன்னாலே அமர்ந்து இருக்கும் ஸ்திரீயை நான் அறிவேன். மற்றும் இங்கு இருக்கும் மக்களையும் நான் அறிவேன். ஆனால், எனக்கு உன்னைத்; தெரியும் என்று நினைக்கவில்லை. இல்லை‚ நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால், அவர் அறிவார். இந்த மேடையின் மேல் நின்று கொண்டிருக்கும் இந்தச் சமயத்திலேயே உனக்கு ஒரு தேவை இருக்குமானால்..... ஆம், இப்பொழுது எவரேனும் காணக் கூடுமானால்‚ உங்களால் காண முடியும் என நான் நம்புகிறேன். அந்த ஸ்திரீ மங்கலாகிக் கொண்டே போகிறது போல் எனக்கு தெரிகிறது. ஆனால், அவளுக்கு வேறு ஏதோ ஒன்று தவறாயிருக்கிறது. அவளுக்கு தோல் வியாதியிருக்கிறது. அது சரி. அது உண்மையென்றால் உன் கரத்தை உயர்த்தவும். அது அவளுடைய சரீரத்தில் உள்ளது. வெளியே காணப்படவில்லை. ஆனால், அவளிடத்தில் அந்த வியாதி உள்ளது. அதுசரி. பாருங்கள். வெறுமனே தொடர்பு கொண்டதில்.... “எங்களை நோக்கிப் பாருங்கள்” என்று பவுல் சொன்ன போது, அவர்கள் உறுதியோடு அவரை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கையில், “நீ சுகத்தைப் பெறும்படி விசுவாசம் உனக்கு உண்டென்று நான் காண்கிறேன்” என்று சொன்னார். 69உன் பக்கத்தில் அமர்ந்து இருக்கும் ஸ்திரீயைக் குறித்து என்ன? அவளும் ஜெபித்ததினால் அவளுக்கு இருந்த தடையானது உடைக்கப்பட்டிருக்கிறது. ஸ்திரீயே எனக்கு உன்னைத் தெரியாது. நாம் இருவரும் ஒருவருக்கொருவர் அந்நியர்கள். அது சரியே. இப்போது பரிசுத்த ஆவியானவர் உனக்கு என்ன பிரச்சனை என்றும் அல்லது எதற்காக நீ இங்கிருக்கிறாய்‚ அல்லது உன் ஜீவியத்தில் உனக்கு மட்டும் தெரிந்த, எனக்குத் தெரியாத காரியத்தை வெளிப்படுத்துவாரானால், அது கிறிஸ்துவினிடத்திலிருந்து வரும் காணக்கூடாத சக்தி‚ வல்லமை என்று விசுவாசிப்பாயா? சரியாக இப்பொழுதே நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். உன் மேல் ஒரு உணர்வு இருக்கிறது. ஒரு உண்மையான, இனிமையான, தாழ்மையான, பணிவான ஒரு உணர்வு, அது சரியென்றால் உன் கரத்தை உயர்த்து. பாருங்கள், அதுவே, சரியாக உனக்கு மேலே அந்த வெளிச்சம் நின்று கொண்டு இருக்கிறது. மற்றும் உன்னுடைய கால்களிலும், பாதங்களிலும் ஒரு பிரச்சனையினால் அவதிப்படுகிறாய். அது சரி, இல்லையா? அது சரியாய் இருக்கும் பட்சத்தில், உன் கை குட்டையை மக்களுக்கு முன்பாக அசைத்துக் காட்டு. அவர்கள் அதைக் காணட்டும். இனி மறுபடியும் அதினால் தொல்லைப்படுத்தப்படுவாய் என நான் நினைக்கவில்லை. எது இவைகளெல்லாவற்றையும் செய்கிறது? என்ன அது? இதோ இந்த மக்களை என்னுடைய வாழ்கையில் கண்டதேயில்லை. எது இந்தக் காரியத்தைச் செய்கிறது. அந்த இருவர். 70அந்த ஸ்திரீக்கு அடுத்ததாக ஒரு வாலிபன் அமர்ந்திருக்கிறான். அதோ அங்கே இருக்கிறான். அது அவனை தாக்கினவுடன், அவன் அழ ஆரம்பித்துவிட்டான். அவன் ஏதோ ஒரு காரியத்திற்காக அல்லது அந்த ஸ்திரீக்காக அழுகிறான். ஓ‚ இல்லை‚ அது அந்த வாலிபனைக் குறித்ததே. அவன் தொண்டையிலும், தலையிலும் இருக்கும் பிரச்சனை அவனை தொல்லைப்படுத்துகிறது. அது சரியே. வாலிபனே, நீ எனக்கு அந்நியனாக இருக்கிறாய் என நினைக்கிறேன்? நான் உன்னைக் கண்டதே இல்லை. அதுசரியே, அது சரியே, அது சரியென்றால் உன் கரத்தை உயர்த்து. அங்கே ஒரு வரிசையில் மூன்று பேர் அமர்ந்து இருக்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையில் அந்த மூவரையும் கண்டதே இல்லை. அவர்களைத் தொடர்பு கொண்டதும் இல்லை. நீங்கள் விசுவாசிப்பீர்களா? இப்பொழுது இந்த திசையில் இங்கே உள்ளவர்கள் எத்தனைபேர் வியாதியோடும், தேவையோடும் இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இந்த திசையில் தேவையுள்ள அனைவரும். ஓ‚ எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். எல்லாம் சரி. இப்பொழுது தொடர்ந்து விசுவாசித்துக் கொண்டிருங்கள். 71என்னைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கும் அந்த மனிதன், நீ கிறிஸ்துவைக் கண்டடைந்தே ஆகவேண்டும் அல்லது மரிக்கவேண்டும். புற்றுநோய் உன்னைக் கொன்றுவிடும். தேவனே சுகமளிக்கிறவர். இங்கு அமர்ந்து இருக்கும் மூத்த ஸ்திரீ, சரியாக இங்கே இந்த இருக்கையில், அவள் வயிற்றுப் பிரச்சனையினாலும், மூட்டு வீக்கத்தினாலும் அவதிப்படுகிறாள். அது சரிதான், நீ அது நடந்து முடிந்தாயிற்று என விசுவாசிப்பாயா? இதோ அந்த மூதாட்டியைப் பார்த்துக் கொண்டிருக்கிற நீ விசுவாசிக்கிறாயா? உனக்குத் தேவை கிறிஸ்துவே. நான் அவருடைய ஊழியக்காரனென்று என்னை நீ நம்புகிறாயா? உன்னை விட்டு அந்த சதை வளர்ச்சி நீங்க வேண்டுமென விரும்புகிறாயா? தேவன் செய்வார் என விசுவாசிக்கிறாயா? அந்த வளர்ச்சி இருப்பதை நான் பார்க்கவில்லை. ஆனால், அது இருக்கிறது. அது உன் கழுத்தின் பின்புறத்தில் இருக்கிறது. ஒரு வேளை நான் உன்னுடைய பெயர் திருமதி. வேல்ஷ் என்று சொன்னால் நீ என்னை விசுவாசிப்பாயா? அது சரியா? அது சரி. அது தானா? சரி. நான் என்னுடைய வாழ்க்கையில் உன்னைக் கண்டதேயில்லை. அது உனக்குத் தெரியும். தேவன் மேல் விசுவாசங்கொண்டிரு. 72அங்கே அமர்ந்திருக்கும் அந்த சிறு ஸ்திரீயினிடத்தில் ஒரு மரண அடையாளம் தொங்கிக் கொண்டிருக்கிறது. அங்கேயும் புற்றுநோய் தான். உன்னை தேவன் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா, ஸ்திரீயே? நீ விசுவாசிப்பாயா? புற்றுநோயினால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறாய். உன்மேல் அந்த கறுப்பு நிழல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நான் கூறுகிறேன், அது உன்னை விட்டுச் சென்றுவிட்டது. நீ விசுவாசித்தால் போதும். அந்த ஸ்திரீயை எனக்குத் தெரியாது. நான் என் வாழ்க்கையில் கண்டதே இல்லை. எனக்குத் தெரிந்த வரைக்கும் இங்கிருக்கும் ஜனங்களில் எவரையும் நான் கண்டதே இல்லை. நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? நான் ஒரு மனிதனைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் இதற்கு முன்பு அவரை என் வாழ்கையில் கண்டதேயில்லை என நினைக்கிறேன். அவர் குடல்இறக்கம் என்ற வியாதியினால் அவதிப்படுகிறார். ஐயா, கர்த்தர் அந்த குடல் இறக்கத்திலிருந்து உன்னை சுகப்படுத்த முடியும் என்று விசுவாசிக்கிறீரா? உம்முடைய மனைவிக்கு நரம்புதளர்ச்சியும், பலவீனமும் உள்ளது. உம்முடைய பெயர். சங்கை. ரீஇட் எனக்கு உம்மைத் தெரியாது. நீர் இந்த நாட்டைச் சேர்ந்தவருமில்லை. நீர் ஓஹாயோவிலிருந்து வருகிறீர். அது சரி. அது சரிஎன்றால் எழும்பி நில்லும். உமக்கும், உம்முடைய மனைவிக்கும் இந்தத் தொல்லை தீர்ந்தது. உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசியும். இப்பொழுது நீர் விசுவாசிப்பீரா? 73இந்த வழியிலே, இந்த வழியிலே கீழே செல்கையில்... அங்கே அந்த வெளிச்சம் தொங்கிக் கொண்டு இருக்கிறதைக் காண முடிகிறதா? இங்கே இந்த வரிசையில் ஒரு ஸ்திரீ ஒரு கிருமியினால் தொற்று நோய் ஏற்பட்டு (virus Infection) அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாள். நீ இந்த பட்டணத்தைச் சேர்ந்தவள் அல்ல. இந்தியானாவில் உள்ள கொலம்பஸ் என்ற இடத்தில் இருந்து வருகிறாய். உன்னுடைய பெயர் எலிசபெத். நீ ஓஹாயோ தெரு என்று அழைக்கப்படுகிற தெருவில் வசிக்கிறாய். உங்களுடைய எண் 1932. ஓஹாயோ தெரு. விசுவாசத்துடன் கடந்து செல். அது இப்பொழுது உன்னை விட்டு நீங்கிவிட்டது. விசுவாசம் கொண்டிரு. இப்பொழுது அந்த ஆவியானது நகர்ந்து, இந்தப் பக்கமாக இருக்கிற ஒரு மனிதனிடம் செல்கிறது. அங்கே ஏதோ ஒரு இணைப்பு இருக்கிறது. இல்லை. அவர் கொலம்பஸ் என்ற இடத்திலிருந்து வந்திருக்கிறார், மற்றும் அவர்கண் பிரச்சனையிலும், வயிற்றுப் புண்ணினாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஐயா, கர்த்தர் உம்மை சுகப்படுத்தி சரியாக்குவார் என்று விசுவாசிக்கிறீரா? மற்றும் உமது சகோதரியின் மகள் உமக்கு முன்பாக அமர்ந்து இருக்கிறாள். அந்த குழந்தைக்கு ஒருவிதமான எலும்பு வியாதியிருந்தது. அது இப்பொழுது சேதப்படுத்தவில்லை. அதோடு ஒரு விதமான சிக்கலை ஏற்படுத்துகிறது. நீர் உமது முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீரானால் நீர் சுகமாக்கப்படுவீர். தேவன் மேல் விசுவாசமாயிரும். இப்பொழுது எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள். 74நான் இன்னொரு புற்றுநோயின் நிழல் இருக்கிறதைக் காண்கிறேன். சகோதரி, நீ உன் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பாயானால் உனக்கு அது நடக்கும். உன்னுடைய விசுவாசமானது அந்த சந்தேகத்தின் எல்லையைக் கடந்து விட்டதா? எத்தனை பேர் உங்களுடைய விசுவாசம் அந்த சந்தேகத்தின் எல்லையைக் கடந்து விட்டது என்று விசுவாசிக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். பிறகு என்ன மீதம் இருக்கிறது.. சுதந்திரமாக ஓட்டத்தை ஓடுங்கள். எல்லாம் முடிந்தது. இங்கே நாற்காலியில் அமர்ந்து இருக்கிற இந்த சிறுபெண்களை எனக்கு தெரியும். கடந்த இரவிலிருந்து அல்ல. ஆனால், இப்பொழுது எனக்கு உங்களைத் தெரியும். என் மனைவி மூலம் உங்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். உன் தாய்க்கு திருமணம் ஆவதற்கு முன்பாக அவளுக்கு ஃபால்கெர்சன் (Falkerson) என்ற பெயர் இருந்தது. உங்களுக்கு இருக்கும் இந்த வியாதியைக் குறித்து யாரும் அறியார்கள். உங்கள்; விரல்களில் தொற்று நோய்பிடித்து இரத்த சம்பந்தமான அல்லது அது போன்று உங்கள் கைகளில் ஒரு வியாதி இருக்கிறது. முதலாவதாக உன்னுடைய விரல்களில் வந்து விடுகிறது. உங்கள் இரு பெண்களுக்கும் அது இருக்கிறது. இரண்டு சிறு அழகான சீமாட்டிகளே‚ எனக்கு உங்கள் தாயாரையும் தெரியும். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பாக ஒரு நாள் இரவு உங்கள் பாட்டியை சந்தித்த போது, அவர்கள் காசநோயிலிருந்து விடுதலையானார்கள். அது சரியே‚ திருமதி. ஃபால்கெர்சன். அழகானசிறு பெண்களே! உங்களைத் தடைசெய்கிற அந்த பிசாசை தேவன் கடிந்து கொள்வாராக. இயேசு கிறிஸ்துவை கல்லறையிலிருந்து எழுப்பின அந்த வல்லமை,அந்தப் பிரச்சனையிலிருந்து விடுவித்து இனி ஒருபோதும் உங்களை தெந்தரவு செய்யாமல் இருப்பதாக. இதை நான் தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தினால் சொல்கிறேன். நீங்கள் அந்த பிசாசின் மேல் கோபம் கொள்ள வேண்டும். தேவன் நமக்கு ஜெயத்தை தருகிறார். அதை நாம் இப்பொழுது பெற்றிருக்கிறோம். “உங்கள் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் ”. 75இந்த கட்டிடத்தில் யாரெல்லாம் அவருடைய வல்லமையினால் சுகமடைந்தீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களோ, உங்கள் கால்களில் எழுந்து நின்று அவருக்குத் துதிசெலுத்துவோம். உம்முடைய சுகமளிக்கும் வல்லமைக்காக நன்றி ஆண்டவரே‚ இதுவே உலகத்தை மேற்கொள்ளுகிற ஜெயம். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்கள் சுகமானார்கள் என்று அறிக்கை செய்கிறோம். இதை தந்தருளும் ஆண்டவரே. “நான் அவரை துதிப்பேன்”, “கெர்டீ”, “நான் அவரை துதிப்பேன்”. நீங்கள் அந்த தடைக் கோட்டை கடந்து விட்டீர்களா? பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியை துதியுங்கள் ஜனங்கள் எல்லோரும் அவருக்கு மகிமை செலுத்துங்கள் ஏனெனில், அவருடைய இரத்தம் எல்லா கறையையும் கழுவினது. (நல்லது, எல்லோரும் இதனுடன் சேர்ந்து வாருங்கள்) நான் அவரை துதிப்பேன், நான் அவரை துதிப்பேன் பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியை துதியுங்கள். ஜனங்கள் எல்லோரும் அவருக்கு மகிமை செலுத்துங்கள். ஏனெனில், அவருடைய இரத்தம் எல்லா கறையையும் கழுவினது. 76நண்பர்களே, கேளுங்கள், நீங்கள் அந்த இடத்திற்கு ஏறிச் செல்லமுடியாது என்று நான் இன்னுமாக விசுவாசிக்கிறேன். இந்த விதமான கூட்டத்தை, பிசாசானவன் வீழ்த்திப்போட (தோற்கடிக்க) விடமாட்டேன். அதற்கு ஒரு வாய்ப்பும் இல்லை.சுவிசேஷமானது பிரசங்கிக்கப்பட்டாயிற்று. அதை உறுதிப்படுத்த கிறிஸ்து இங்கே இருக்கிறார். பிசாசு ஒரு பொய்யன். இங்கிருக்கிற ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவினால் சுகமடைந்தீர்கள். இந்த விசுவாசத்தோடே உந்திச் செல்லுங்கள். அது அங்கே இருக்கிறது. அது உங்களுடையது. இனி ஒரு போதும் ஒரு குறிக்கோள் இல்லாமல் அலைந்து திரியாதீர்கள். கல்வாரியின் மேல் நிலைவரப்பட்டு அவருக்கே துதியும் கனமும் செலுத்துங்கள். நீங்கள்அவரை நேசிக்கிறீர்கள் என்று அவரிடத்தில் சொல்லுங்கள். அவரை மெச்சிக் கொள்கிறீர்கள் என்று அவரிடத்தில் சொல்லி, அந்த வேறு பிரித்திடும் கோட்டைக் கடந்து செல்லுங்கள். அப்பொழுது தேவன் உங்களை சுகப்படுத்தி குணமடையச் செய்வார். உண்மையாக அதைக் கூறுங்கள். ஏனோதானோ என்று சொல்ல வேண்டாம். உங்களுடைய உள்ளத்திலிருந்து உணர்ந்து அவருக்கு துதிசெலுத்துங்கள். (இப்பொழுது உங்களுடைய இருதயத்திலிருந்து, உள்ளத்தின் ஆழத்திலிருந்து பாடுங்கள்) நான் அவரை துதிப்பேன் நான் அவரை துதிப்பேன் பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியை துதியுங்கள். ஜனங்கள் எல்லோரும் அவருக்கு மகிமை செலுத்துங்கள். (அவருக்கு துதி செலுத்துங்கள்) ஏனெனில் அவருடைய இரத்தம் எல்லா கறையையும் கழுவினது. 77எந்த விதமான கறை? சந்தேகத்தின் கறை. “இப்பொழுது நான் சுகமானேன், அவருடைய தழும்புகளால் நான் சுகமானேன்”. நான் கர்த்தருக்குச் சொந்தமானவன். என் வியாதியெல்லாம் போயின. நான் அவரைத் துதிப்பேன். நான் அவரைத் துதிப்பேன். நான் அவருக்கு மகிமை செலுத்துவேன். நான் ஜெயத்தின் சத்தமிடுவேன். அவரை நேசிக்கிறேன் என்று அவரிடத்தில் கூறுவேன். நான் அவரை விசுவாசிப்பேன். நான் விடுதலையானேன். அல்லேலூயா‚ ஏனெனில் அவருடைய இரத்தம் எல்லா கறையையும் கழுவினது. நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன் பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியைத் துதியுங்கள். ஜனங்கள் எல்லோரும் அவருக்கு மகிமை செலுத்துங்கள் . ஏனெனில் அவருடைய இரத்தம் எல்லா கறையையும் கழுவினது. (இப்பொழுது அதற்குள்ளாகக் கடந்து செல்லுங்கள். ஒவ்வொரு கறையையும்)கடந்து செல்லுங்கள். நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன். (அல்லேலூயா, அல்லேலூயா) பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியைத் துதியுங்கள். ஜனங்கள் எல்லோரும் அவருக்கு மகிமை செலுத்துங்கள். ஏனெனில் அவருடைய (இது போதும்) இரத்தம் எல்லா கறையையும் கழுவினது. நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன். (தொடர்ந்து பாடுவோம். அவருடைய இரத்தத்தில் கழுவப்பட்டு) பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியைத் துதியுங்கள். ஜனங்கள் எல்லோரும் அவருக்கு மகிமை செலுத்துங்கள். ஏனெனில் அவருடைய இரத்தம் எல்லா கறையையும் கழுவினது. 78மகிமை, கர்த்தரைத் துதியுங்கள். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அவரைத் துதியுங்கள், அவரைத் துதியுங்கள், மகிமையுள்ள ஆட்டுக்குட்டி என்றென்றும் ஜீவிக்கிறார். பழைய ஏற்பாட்டின் யெகோவா தேவன் இப்பொழுது இந்நாளில் நம் மத்தியில் இருக்கிறார். அவருடைய கிரியைகள் எவ்வளவு பிரமிக்கத்தக்க அதிசயமானவைகளாக இருக்கிறது. அவருடைய அதிசயங்களும், அடையாளங்களும் ஆராயப்பட முடியாதவைகள். ஓ‚ எவ்வளவு அருமையானது, ஓ‚ அவர் மகிமையுள்ளவர். இப்பொழுது எத்தனை பேர் தேவனுடைய பிரசன்னத்தை உணருகிறீர்கள்? நிச்சயமாக. இப்பொழுது உங்களிடத்திலிருந்து எல்லா சந்தேகமும் மங்கிப் போகட்டும். நீங்கள் சுகமடைந்தீர்கள். அவருடைய காயங்களால் சுகமானீர்கள். அது முடிந்தது. அவரை துதித்து மகிமையைச் செலுத்துங்கள். இந்த கட்டிடத்தில் பரிசுத்த ஆவியானவர் எல்லா இடத்திலும் இறங்கி வருகிறார். அந்த மகத்தான ஒளி வட்டம் இந்த இடத்தை வட்டமிடுகிறது. எவ்வளவு அருமையாயிருக்கிறது. நாம் எவ்வளவாய் அவரை நேசிக்கிறோம். மற்றும் யுத்தமானது முடியும் போது, நாம் கிரீடத்தை அணிவோம் ஆம்‚ நாம் கிரீடத்தை அணிவோம், ஆம்‚ நாம் கிரீடத்தை அணிவோம் அந்த யுத்தமானது முடியும் போது, புது எருசலேமிலே நாம் கிரீடத்தை அணிவோம்‚ கிரீடத்தை அணிவோம்‚ கிரீடத்தை அணிவோம்‚ பளபளப்பான, மின்னும் கிரீடத்தை அணிவோம். அந்த யுத்தமானது முடிந்த பின்பு, புது எருசலேமிலே, நாம் கிரீடத்தை அணிவோம். கிரீடத்தை அணிவோம், கிரீடத்தை அணிவோம், பளபளப்பான, மின்னும் கிரீடத்தை அணிவோம். அந்த யுத்தமானது முடிந்த பின்பு, புது எருசலேமிலே, நாம் கிரீடத்தை அணிவோம். 79பரிசுத்த ஆவியானவர் பெந்தெகொஸ்தே நாளில் இறங்கினதைப் போலவே இங்கும் இறங்கி சிறைக் கட்டுகளை அவிழ்த்துவிட்டதைப் போலவே இருக்கிறது. இது என்னுடைய கருத்தாயிருக்கிறது. நான் இப்பொழுது இங்கு மெனோநைட் சகோதரன் ஒருவரைக் காண்கிறேன். அவர் இந்தியானா போலீஸ் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் இருந்தவர். அவர் காக்காய் வலிப்பு நோயினால் அநேக ஆண்டுகள் கஷ்டப்பட்டுக் கொண்டவராய் வந்திருந்தார். அந்த கூட்டத்தில் பரிசுத்தாவியானவர் அவரை அழைத்தபின் அவருக்கு அந்த பிரச்சனை மறுபடியும் வந்ததேயில்லை. தேவனாகிய கர்த்தர் அவரை சொஸ்தமாக்கி பூரணமாக குணப்படுத்தினார். அவர் ஒரு மெனோநைட் பிரசங்கி. ஓ‚ அவர் அருமையானவர் அல்லவா? அவருடைய நன்மையை ருசி பார்த்தவர்களைத் தவிர வேறு ஒருவருக்கும் அவர் எவ்வளவு நல்லவர் என்று தெரியாது. 80இப்பொழுது நண்பர்களே, என்னுடைய கருத்தில், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் மத்தியில் வந்து நம்மை ஆசீர்வதிக்கிறது, பண்டைய கால மார்க்கமாயிருக்கிறது. நீங்கள் இங்கிருக்கிறதைக் குறித்து மிக மகிழ்ச்சியடைகிறோம். இப்பொழுது இங்கு தெய்வீக பிரசன்னத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும், உங்களுடைய அவிசுவாசத்தை எல்லாம் பின்னால் தள்ளி மூழ்கடிக்கிற விசுவாசம் உங்களுக்கு இருக்கும் என்றால்; அப்பொழுது நீங்கள் விடுதலையானீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்போதிருந்து எந்த ஒரு நோயினையும் உரிமைகோராதீர்கள். முன்னேறிப் போங்கள். உங்களுடைய பிரச்சனையை ஒரு மருத்துவரிடம் ஒப்படைத்திருக்கிறீர்கள். இப்பொழுது இயேசு கிறிஸ்துவினிடம் ஒப்புக் கொடுங்கள். நாம் விடுதலையைப் பெற்றுக் கொள்ளும்படிக்கு அவர் உங்கள் மீது அறுவை சிகிச்சை செய்து, எல்லா அவிசுவாசத்தையும் நீக்கியிருக்கிறார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இது பண்டைய கால மார்க்கம், அதுவே எனக்கு போதுமானது. இது பண்டைய கால மார்க்கம் இது பண்டைய கால மார்க்கம் இது பண்டைய கால மார்க்கம் அதுவே எனக்கு போதுமானது. அது என்னை எல்லோரையும் நேசிக்க செய்கிறது. அது என்னை எல்லோரையும் நேசிக்க செய்கிறது. அது என்னை எல்லோரையும் நேசிக்க செய்கிறது. அதுவே எனக்கு போதுமானது. ஓ, இதுபண்டைய கால மார்க்கம், இது பண்டைய கால மார்க்கம், இது பண்டைய கால மார்க்கம், இது பண்டைய கால மார்க்கம் அதுவே எனக்கு போதுமானது.